பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108.

109.

110.

111.

112.

113.

114.

115.

93

பொதுப்பின்னம் எனப்படும். பொதுப்பின்னம் என்றால் என்ன? பின்னத்தில் ஒரு வகை. பொதுமடங்கு என்றால் என்ன? இதுவும் ஒரு முழு எண். ஒர் எண் தொகுதி ஒவ்வொன் றின் மடங்கு. எ-டு5,2550 ஆகிய மூன்றின் பொதுமடங்கு 100. மீச்சிறு பொதுமடங்கு என்பது பொதுமடங்கான மிகச்சிறிய எண்ணிக்கை. இங்கு அது 50. பொதுவீதம் என்றால் என்ன? பெருக்குத் தொடரில் அடுத்தடுத்துள்ள உறுப்புகளின் வீதம். தொகுதி என்றால் என்ன? பின்னத்தின் உச்சிப்பகுதி.எ-டு. 3/4 என்னும் பின்னத்தில் 3 தொகுதி. 4 பகுதி. தொகுதி வகுபடுஎண். பகுதிப் பின்னங்கள் என்றால் என்ன? குறிப்பிட்ட பின்னத்திற்குச் சமமான பின்னங்களின் கூட்டுத்தொகை. எ-டு 1/2 +1/4 = 3/4. பகுதிப் பின்னங்கள் தொடர்பாக வீதம் எழுதுவது என்பது சமன்பாடுகளைத் தீர்க்கவும் முழுக்களைக் கணக்கிடவும் பயனுள்ளதாக அமையும். தசம என்றால் என்ன? பத்து அடிப்படையில் அமைந்தது என்பது பொருள். நாம் எண்ணுவதற்குப் பயன்படும் எண்கள் தசம எண்முறையைத் தோற்றுவிப்பவை. தசம பின்னம் என்றால் என்ன? இப்பின்னம் ஒரு வீதமுறு எண். அலகுகளாகவும் பத்துகளாகவும் நூறுகளாகவும் ஆயிரங்களாகவும் எழுதப்படுவது. எ-டு 1/4 = 0.25. தசம பின்ன வகைகள் யாவை? - 1. முடிவுறு தசமபின்னம் - 0.25, 2. மீள்வருதசமபின்னம் - துல்லியத் தசமமாக எழுத இயலாதது. 5/27 (=0,185 185 185.)