இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
97
- 1. விலக்குநிலை
- 2. பெருகு நிலை
- 3. விடுபடு நிலை
- 4. சுரப்பு நிலை.
28. பெரும் போக்கு விலக்கு என்றால் என்ன?
- வீட்டு விலக்கின்பொழுது உண்டாகும் அதிகக் குருதிக் கசிவு.
29. கங்காரு தாய் என்றால் என்ன?
- 1990 களில் டாக்டர் கெராட் ரேசனாப்ரியா என்பவரால் கங்காரு நடத்தை அடிப்படையில் உருவாக்கப்பட்ட அடையளிக்கும் துணுக்கம். பிறந்த குழந்தைகளைக் காக்க உதவுவது.
30. கேள் - துலங்கல் தொட்டில் என்றால் என்ன?
- கைப்பெட்டி போன்ற கருவியமைப்பு. பிறந்த குழந்தைகளின் கேட்கும் திறனை ஆராய்ந்தறிவது. பேரா. சாம் டக்கரி முதலியோர் இதை வடிவமைத்தவர்கள். (1995)
31. செயற்கை விந்தேற்றம் என்றால் என்ன?
- செயற்கையாக விந்தை எடுத்துப் புணர்வழியாகச் செலுத்துதல்.
32. ஆய்வுக் குழாய்க் குழந்தை என்றால் என்ன?
- ஆய்வகத்தில் முட்டை கருவுறச் செய்யப்பட்டுக் கருப்பையில் பதிய வைக்கப்படுகிறது. இதிலிருந்து வளர்வதே பிறக்கும் குழந்தை 1991 இல் வெற்றி தரும் வகையில் இந்த ஆய்வு நடந்தது.
33. ஆய்வுக் குழாய்க் குழந்தைக் கூட்டம் எப்பொழுது எங்கு நடைபெற்றது?
- இம்முதல் கூட்டம் 27-4-97 அன்று ஜெய்பூரில் நடை பெற்றது. ஜெய்ப்பூர் இனவள மையம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
34. இதன் நோக்கம் யாது?
- ஆய்வுக் குழந்தைத் தொழில்நுட்பம் பற்றிய அச்சம், தவறான கருத்து ஆகியவற்றைப் போக்குவது. 125 ஆய்வுக் குழாய்க் குழந்தைகள் உருவாக்கப்
ம.7