பக்கம்:அலிபாபா.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பார்க்க வேண்டிய அளவுக்கு உன்னிடம் பொற்காசுகள் குவிந்திருக்கின்றன!” என்று அவன் சொன்னான். அலிபாபா, “அண்ணா! நீ சொல்வது ஒன்றும் புரிய வில்லையே! விளக்கமாய்ப் பேசு!” என்றான். காஸிம் கோபமடைந்து, “உனக்கா புரியவில்லை? நன்றாகப் புரிந்துகொண்டு விஷயத்தை மறைக்கப் பார்க்கிறாய்!” என்றான். அவன் தன் கையிலிருந்த தங்க நாணயத்தைக் காட்டி, “இதைப்போல் நீ ஆயிரக்கணக்கில் வைத்திருக்கிறாய். தராசுத் தட்டில் ஒட்டியிருந்த இந்தக்காசை என் மனைவி எடுத்து என்னிடம் கொடுத்தாள்!” என்றும் அவன் தெரிவித்தான். ஏராளமான காசுகள் தன்னிடம் வந்துள்ளதைக் காஸிமும், அவன் மனைவியும் தெரிந்து கொண்டு விட்டனர் என்பதை அலிபாபா உனர்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/17&oldid=723066" இலிருந்து மீள்விக்கப்பட்டது