பக்கம்:அலிபாபா.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அலிபாபா


பாறையைப் பார்த்து, அவன், “ஓ பார்லி, திற!” என்று கூவினான். வழக்கமாகச் சொல்லவேண்டிய மந்திரச் சொல்லை அவன் மறந்துவிட்டதால், 'ஸிம்ஸிம்' என்பதற்குப் பதிலாக ‘பார்லி’ என்று தானாகக் கற்பனை செய்து கூவினான். அதனால் பாறை அசையவில்லை. ‘ஸிம்ஸிம்’ என்ற சொல் எள்ளுச்செடியின் பெயரை நினைவுறுத்தக் கூடியதாக இருந்ததால், அவன் வேறு பல தானியங்கள் பெயர்களைச் சொல்லி, “திற!” “திற!” என்று கூவிப் பார்த்தான். வழி திறக்கப்படவில்லை. அப்பொழுதுதான் அவன் தனக்கு ஏற்பட்டிருந்த அபாய நிலையை நன்கு உணர்ந்துகொண்டான். ஆசையுடன் அள்ளிக் கட்டி வைத்திருந்த நாணயமூட்டைகளை அப்பொழுது அவன் மதிக்கவில்லை. நாலு பக்கங்களிலும் நிறைந்திருந்த கண்ணைப் பறிக்கும் பொருள்களிலே அவன் நாட்டம் செல்லவில்லை. குகையைக் கடந்து வெளியேறுவது எப்படி என்பதை மட்டுமே சிந்தனை செய்துகொண்டு, அவன் குகையில் குறுக்கிலும் நெடுக்கிலுமாக நடந்து கொண்டிருந்தான். அவன் தேடி வந்தது பொன். இப்பொழுது அவன் உயிரே ஆபத்துக்குள்ளாகியிருந்தது!

நண்பகலில் திருடர்கள் குகைப்பாதையிலே குதிரைகள் மீது சென்றுகொண்டிருந்தார்கள். அப்பொழுது புதர்களின் பக்கமாகப் பல கோவேறு கழுதைகள் சுற்றி மேய்ந்து கொண்டிருந்ததை அவர்கள் கண்டனர். அங்கேயிருந்த பத்துக் கழுதைகளையும் பிடித்து விற்றால், நல்ல விலை கிடைக்கும். ஆனால், அவர்கள் அவைகளைப் பிடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/20&oldid=512478" இலிருந்து மீள்விக்கப்பட்டது