பக்கம்:அலிபாபா.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொண்டான். அவர்கள் உள்ளே வந்ததும் தன்னைக் கொலை செய்துவிடுவார்கள் என்று அஞ்சி, அவன் தரையில் விழுந்து தயங்கிக் கொண்டிருந்தான். வாயிற் பாறை விலகியதும், அவன் விரைவாக வெளியே ஓடித் தப்பித்துக் கொள்ளவேண்டும் என்று கருதி ஆவலோடு ஓடத் தொடங்கினான். ஓடிய ஓட்டத்தில் அவன் குகை வாயிலில் முதலில் நின்று கொண்டிருந்த திருடர் தலைவன்மீதே முட்டிக் கொண்டான். உடனேயே, தலைவன் அவனை ஒரு கையால் ஓங்கியடித்துத் தரையிலே தள்ளி விட்டான். தலைவனின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த திருடன் ஒருவன், தன் உடை வாளை உருவி, காஸிமை இரு துண்டுகளாக வெட்டிப் போட்டுவிட்டான். பிறகு எல்லாத் திருடர்களும் குகைக்குள் சென்றனர். காஸிம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/22&oldid=512480" இலிருந்து மீள்விக்கப்பட்டது