பக்கம்:அலிபாபா.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொறாமையால் விளைந்த கேடு

25



பற்றி வந்த கழுதையை உள்ளே முற்றத்திற்குக் கொண்டு சென்று, அதன்மீது வைத்திருந்த இரண்டு துணி மூட்டை களையும் கீழே இறக்கி வைத்தான். பின்னர், வேலைக் காரியைப் பார்த்து. அவன், “மார்கியானா மரித்துப்போன உன் எசமானரின் ஈமச்சடங்குகளுக்கு ஏற்பாடு செய்! முதலில் நான் போய் மதினியிடம் செய்தி சொல்லிவிட்டு, மீண்டும் வருகிறேன்!” என்று சொன்னான். அந்த நேரத்தில், மதினியே அங்கு வந்துவிட்டாள். அவள் மைத்துனனின் முகத்தில் தென்பட்ட சோகக் குறிகளைக் கண்டு, உளம் கலங்கி, என்ன செய்தி என்று விசாரித்தாள். அலிபாபா, குகையில் தான் கண்ட காட்சியையும், அண்ணன் அங்கங்களைச் சேகரித்து வந்திருப்பதையும் சுருக்கமாகக் கூறினான். “நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இந்த விஷயத்தை நாம் மிகவும் இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். இரகசியம் வெளியானால், நம் எல்லோருடைய உயிருக்கும் ஆபத்து வந்துவிடும்!” என்றும் அவன் கேட்டுக் கொண்டான். காஸிமின் மனைவி ‘ஓ’ வென்று அழுது கொண்டே, “என் கணவரின் விதிப்படி அவர் வாழ்க்கை முடிந்துவிட்டது. இனி உங்களைக் காப்பதற்காக நான் எல்லாவற்றையும் இரகசியமாக வைத்துக் கொள்கிறேன்!” என்று சொன்னான்.

அதன் பின்பு அலிபாபா, “ஆண்டவன் கட்டளையை யாரும் மீறி நடக்கமுடியாது. நீ பொறுமையுடன் இருக்க வேண்டும். நெடுநாள் கைம்பெண்ணாகக் கஷ்டப்படும்படி விடாமல், நானே உன்னைப் பின்னால் இரண்டாம் தாரமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/27&oldid=512485" இலிருந்து மீள்விக்கப்பட்டது