பக்கம்:அலிபாபா.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொறாமையால் விளைந்த கேடு

27



வாங்கிவிடுவார்கள். மார்கியானா நிலை மையைப் தெளிவாக உணர்ந்திருந்ததால், எல்லாவற்றையும் கவனமாக நடத்துவதாக உறுதிகூறி, அலிபாபாவை அனுப்பி வைத்தாள்.

அவன் வெளியே சென்றபின், மார்கியானா ஒரு மருந்துக்கடைக்குப்போய், கொடிய நோய் கண்டவர்களுக்குக் கொடுக்கவேண்டிய மருந்து ஒன்று வேண்டும் என்று கேட்டு, வாங்கி வந்தாள். அப்பொழுது கடைக்காரன், வீட்டில் யாருக்கு உடல் நலமில்லை என்று கேட்டான். “எங்கள் முதலாளி காஸிம் பல நாள்களாகப் படுத்த படுக்கையாய்க் கிடக்கிறார். அன்னம், ஆகாரமில்லை; வாய் திறந்து பேசவுமில்லை. அநேகமாய்ப் பிழைக்கமாட்டார் என்றே தோன்றுகிறது!” என்று அவள் மறுமொழி சொல்லிவிட்டுத் திரும்பினாள்.

மறுநாளும் மார்கியானா, முன் சென்ற மருந்துக் கடைக்கே போய், மரண அவஸ்தையில் இருப்பவருக்குக் கொடுக்கக்கூடிய உயர்ந்த மருந்து வேண்டும் என்று கேட்டு வாங்கிக்கொண்டாள். அப்பொழுது, “இந்த மருந்து அவர் தொண்டையில் இறங்குமோ, என்னவோ, தெரியவில்லை. நான் வீடு போய்ச் சேருமுன்பே அவர் காரியம் முடிந்துவிடக் கூடும்!” என்று சொல்லிக்கொண்டே சென்றாள்.

இடையில் அலிபாபா அண்ணன் வீட்டில் அழுகைக் குரல் கேட்டவுடன் தானும் அங்கே சென்று ஈமச் சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டுமென்று கருதி, தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/29&oldid=512486" இலிருந்து மீள்விக்கப்பட்டது