பக்கம்:அலிபாபா.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புறப்பட இசைந்து விட்டான். அவர்கள் சிறிது தூரம் சென்ற பின், அவள் அவனுடைய கண்களைத் துணியால் மறைத்துக் கட்டி, அவனைக் காஸிமுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். அங்கே வெளிச்சமில்லாத ஓர் அறையில், ஒரு மேடை மீது காஸிமின் அங்கங்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு அவள் முஸ்தாவின் கண்களிலே கட்டியிருந்த துணியை அவிழ்த்து விட்டு, அவன் அந்த அங்கங்களை முறையாகப் பொறுத்தி வைத்து, ஒரே உடலாகத் தைத்துக் கொடுக்க வேண்டுமென்றும், அந்த உடலுக்கு ஏற்ற அளவில் ஒரு கபன்[1] தைக்க வேண்டுமென்றும் கூறினாள். வேலை முடிந்ததும், கையில் மேலும் ஒரு திர்ஹம் தருவதாகவும் அவள் வாக்களித்தாள். பணத்திற்காக எதையும் செய்யத் தயாராகி விட்டான் முஸ்தபா.


  1. கபன் - பிணத்திற்குப் போர்த்தும் துணி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/31&oldid=947019" இலிருந்து மீள்விக்கப்பட்டது