பக்கம்:அலிபாபா.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அலிபாபா



அவள் கோரியபடியே பினத்தைத் தைத்து, கபனையும் முடித்துக் கொடுத்தான். அவள், தன் சொற்படி, மேலும் ஒரு தங்க நாணயத்தை அவனுக்கு அளித்து, மீண்டும் அவனுடைய கண்களைக் கட்டி, வெளியே அழைத்துச் சென்று, அவன் கடைப்பக்கம் கொண்டுபோய் விட்டு விட்டு வந்தாள்.

வீட்டுக்கு வந்ததும் அவள், அலிபாபாவையும்கூட வைத்துக்கொண்டு, பினத்தை வெந்நீரில் குளிப்பித்து, அதன்மீது கபனைப் போர்த்திச் சுத்தமான தரையிலே அதைத் துக்கி வைத்தாள். பிறகு, அவள் பள்ளிவாசலுக்குச் சென்று, இமாமை அழைத்து வந்தாள். சமய முறைப்படி இமாம் திருக்குர்ஆன் ஓதிய பின்பு, நான்கு பேர்கள் சவப்பெட்டியைத் துரக்கிக் கொண்டு கபருஸ்தானை[1] நோக்கிப் புறப்பட்டனர். இமாமும் அலிபாபா முதலியோரும் தொடர்ந்து சென்றனர். மார்கியானா, விரித்த தலையுடன், மார்பில் அடித்து அழுதுகொண்டே பிரேதப் பெட்டிக்கு முன்னால் சென்று கொண்டிருந்தாள். இடுகாட்டில் பிரேதம் முறைப்படி அடக்கம் செய்யப்பெற்ற பின், எல்லோரும் அங்கிருந்து வெளியேறிச் சென்றனர்.

நகரின் வழக்கப்படி பெண்டிர் பலரும் காஸிமுடைய வீட்டுக்கு வந்து, அவன் மனைவியிடம் துக்கம் விசாரித்தனர். சிலர் ஒப்பாரி வைத்து அழுதனர். பலர் விதவைக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினர். இவ்வாறு ஈமச்சடங்கு முறைப்படி நடந்தேறியது. ஆனால், காஸிம்


  1. கபருஸ்தான் - இடுகாடு, கபர் - சவக்குழி.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/32&oldid=512487" இலிருந்து மீள்விக்கப்பட்டது