பக்கம்:அலிபாபா.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொறாமையால் விளைந்த கேடு

31



மரித்த விவரம் அவன் மனைவி, வேலைக்காரி, அலிபாபா ஆகிய மூவருக்கு மட்டுமே தெரியும். மற்றவர் அனை வரும் அவன் இயற்கையாக நோயுற்று மாண்டதாகவே எண்ணிக்கொண்டனர்.

நாற்பது நாள்கள் துக்கம் காத்த பின்பு, அலிபாபா அண்ணனுடைய சொத்துகளைத் தன் வீட்டிலேயே கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டு, விதவையைத் தானே திருமணம் செய்துகொண்டான். அவளுடைய மூத்த மகன் ஒரு வியாபாரிடம் தொழிலிலே பயிற்சி பெற்றிருந்ததால், காஸிமுடைய கடையை அவனே நடத்தும்படி ஏற்பாடு செய்து, மேற்கொண்டு தேவையான பணத்தைத் தானே கொடுப்பதாகவும் அலிபாபா தெரிவித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/33&oldid=512488" இலிருந்து மீள்விக்கப்பட்டது