பக்கம்:அலிபாபா.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அலிபாபா


 தங்கள் செல்வம் முழுவதும் அதனால் கரைந்து போய்விடும் என்றும் எடுத்துக்காட்டிப் பேசினான். திருடர்களிலே ஒருவன், தான் நகரிலே சென்று, ஒரு வணிகனைப்போல நடித்து, தெருத்தெருவாகவும், வீடு வீடாகவும் விசாரித்து, தங்களுக்குத் துரோகம் இழைத்த வனைக் கண்டுபிடிப்பதாகக் கூறினான்: “நான் கண்டுபிடித்து வருகிறேன்; தவறினால் என் உயிரை இழக்கத் தயாராயிருக்கிறேன்!” என்று அவன் வீரமும் பேசினான். தலைவனும் அதற்கு இசைந்ததால், அத்திருடன், மாறுவேடம் பூண்டு, இரவு நேரத்தில் நகரத்திற்குச் சென்றான்.

மறுநாள் காலையில் நன்றாக விடியுமுன்பே அவன் கடைத் தெருவைச் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தான்; பெரும்பாலும் கடைகள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால், ஒரு தையற்கடை மட்டும் திறந்திருப்பதைக் கண்டு, அவன் அதனுள் சென்று கவனித்தான். அது முஸ்தபாவின் கடை. அவன் அங்கே ஏதோ உடை ஒன்றைத் தைத்துக்கொண்டிருந்தான். திருடன் அவனைப் பார்த்து, “இந்த மங்கிய ஒளியில் தைப்பதற்கு உங்களுக்குக் கண் தெரிகிறதா?” என்று கேட்டான். உடனே முஸ்தபா, “என்னைப்பற்றி இந்த நகரம் முழுவதும் நன்கு அறியும். நீர் ஊருக்குப் புதிது போலிருக்கிறது. இல்லாவிட்டால் இப்படிக் கேட்கமாட்டீர்! எனக்கு வயது அதிகமான போதிலும் கண் பார்வை மிகவும் கூர்மையாகவே உள்ளது. நேற்றுக்கூட ஓர் இருட்டறையில் இருந்துகொண்டே, நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/36&oldid=512489" இலிருந்து மீள்விக்கப்பட்டது