பக்கம்:அலிபாபா.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அவனிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி எதுவுமில்லாததால், திருடன் அவனைத் தையற் கடையிலே கொண்டு விட்டு, அவனுக்குப் பல தடவைகள் நன்றி கூறி விட்டுச் சென்றான். காட்டிலே உள்ள தோழர்களுக்குத் தான் அதுவரை அறிந்த செய்தியைச் சொல்லுவதற்காக அவன் போய் விட்டான்.

அவன் சென்ற சிறிது நேரத்திற்குப் பின், மார்கியானா வீட்டு வாயிற் பக்கம் வந்து நிற்கையில், கதவின் வெளிப்பாகத்தில் சுண்ணாம்பினால் புதிதாக அடையாளங்கள் செய்யப்பட்டிருப்பதைக் கவனித்தாள். எவரோ பகைவர், பின்னால் அடையாளம் தெரிந்து கொண்டு வருவதற்காகச் சுண்ணாம்பினால் அப்படிக் குறிகள் போட்டிருக்க வேண்டும் என்று அவள் யூகித்துக் கொண்டாள். உடனே, அவளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/40&oldid=947023" இலிருந்து மீள்விக்கப்பட்டது