பக்கம்:அலிபாபா.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

அலிபாபா



வீட்டுக் கதவில் சுண்ணாம்புக் குறிகளைக் கண்டதும், அங்கே நின்று “இதுதான் அந்த வீடு!” என்று தலைவனிடம் கூறினான். தலைவன் பக்கத்திலிருந்த வேறு சில வீடுகளின் கதவுகளை உற்றுக் கவனித்தான். அவைகளிலும் ஒரே மாதிரியான சுண்ணாம்புக் குறிகள் காணப்பெற்றதால், அவன் திகைப்படைந்து, தோழனிடம் அதை தெரிவித்தான். தான் முன்பு போட்டிருந்த குறிகளே பல வீடுகளிலும் இருந்ததால், அவன் தான் பார்த்த வீட்டை அடையாளம் தெரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, அவன் ஏதோ கோளாறு நேர்ந்திருக்க வேண்டும் என்று அஞ்சினான். தலைவன், மறுபடி எல்லோரையும் வனத்திலே குகைக்கு வந்து சேரும்படி சொல்லிவிட்டு, தானும் வேறு ஒரு வழியாகப் பயணமானான்.

குகையிலே கூடிய திருடர் கூட்டத்தில் முதலாவதாகப் புலன் விசாரிக்கத் சென்று தோல்வியடைந்த திருடனைக் காவலில் வைக்க வேண்டும் என்று முடிவு செய்யப் பெற்றது. அடுத்தாற்போல் நகருக்குள் சென்று விசாரித்துவர யார் தயார் என்று தலைவன் கேட்கையில், ஒருவன் முன் வந்தான். அவனைத் தலைவன் மிகவும் பாராட்டி, சில பரிசுகளும் அளித்து, வாழ்த்தி, அனுப்பி வைத்தான்.

அவனும் நகரில் முதன் முதலாகப் பாபா முஸ்தபாவையே சந்தித்து, அவனுக்குத் தங்க நாணயங்கள் கொடுத்து, அலிபாபா தங்கியிருந்த வீட்டைத் தெரிந்துகொண்டான். முதலாவது திருடன் செய்தது போலன்றி, அவன் கதவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/42&oldid=512492" இலிருந்து மீள்விக்கப்பட்டது