பக்கம்:அலிபாபா.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அலிபாபா


திரும்பக் கூறினாள், பிறகு அவள், ஆண்டவனே! இவன் எண்ணெய் வணிகன் என்று நம்பியல்லவா இவனை என் முதலாளி வீட்டினுள் ஏற்றினார்! ஆனால், இவனோ திருடர்களைக் கொண்டுவந்து அடைத்திருக்கிறான்! எல்லோரும் இவனுடைய உத்தரவை எதிர்பார்த்துக் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்! இவர்கள் இன்று வீட்டைக் கொள்ளையடித்து, முதலாளியையும் கொன்று விடுவார்கள்!” என்று தனக்குத்தானே பேசிக்கொண்டாள். பிறகு, கடைசியாக எஞ்சியிருந்த தாழிப்பக்கம் சென்று பார்த்தாள். அதில் ஆளில்லை, நிறைய எண்ணெய் இருந்தது. உடனே, அவள் தன் டப்பா நிறைய எண்ணெயை எடுத்துக் கொண்டு சென்றாள்.

அவள் வீட்டிலிருந்த விளக்குகள் எல்லாவற்றிலும் எண்ணெய் ஊற்றி, திரிகளை நன்றாகத் துண்டிவிட்டு, எல்லாவற்றையும் பொருத்தி வைத்தாள். பின்னர், அடுப்பில் நிறைய விறகுகளை அள்ளிப்போட்டு, ஒரு பெரிய அண்டாவைத் துக்கி அடுப்பின்மேல் வைத்தாள். டப்பாவில் இருந்த எண்ணெயை அண்டாவில் ஊற்றி விட்டு, மேலும் மேலும் ஏராளமான எண்ணெயை எடுத்து வந்து ஊற்றி, அதை வேகமாகக் கொதிக்க வைத்தாள். பின்பு, கொதிக்கும் எண்ணெயைப் பல கலயங்களிலே கொண்டுபோய் ஒவ்வொரு தாழிக்குள்ளும் ஊற்றத் தொடங்கினாள். ஒவ்வொரு தாழியினுள் அமர்ந்திருந்த திருடனும், வெளியே வரமுடியாமலும், வாய் திறந்து கூவ முடியாமலும், கொதிக்கும் எண்ணெயால் தலை, முகம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/50&oldid=512499" இலிருந்து மீள்விக்கப்பட்டது