பக்கம்:அலிபாபா.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அழைத்துக் கொண்டு, ஹம்மாமுக்குச் சென்றான். அவன், குளித்து விட்டுத் திரும்புவதற்குள், சூரியன் அடிவானத்திற்கு மேலே எழுந்து விட்டான். அவன் வீட்டினுள் நுழைந்ததும், கொட்டகையில் தாழிகள் வைத்த இடங்களில் அப்படியே இருந்ததைக் கண்டு, “என்ன, இந்த வியாபாரி இவற்றை இன்னும் சந்தைக்கு எடுத்துப் போகவில்லையா?” என்று மார்கியானாவிடம் கேட்டான். அவள் உடனே, “உங்களுக்கு ஆண்டவன் நூறு வயதுக்கு மேல் அளித்து அருள் புரிய வேண்டும்! அந்த வியாபாரியைப் பற்றி நான் உங்களிடம் தனியாகச் சொல்லுகிறேன், வாருங்கள்!” என்று சொல்லி அழைத்துச் சென்றாள். முதலில் வாயிற் கதவைத் தாழிட்டாள். பிறகு, கொட்டகைப் பக்கம் சென்று, ஒரு தாழியை அவனுக்குக் காட்டி, “இதில் எண்ணெய் இருக்கிறதா? வேறு ஏதேனும் இருக்கிறதா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/53&oldid=947030" இலிருந்து மீள்விக்கப்பட்டது