பக்கம்:அலிபாபா.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விஷயங்களைப் பற்றியெல்லாம் தலைவன் நெடுநேரம் யோசித்து, தானே இவற்றுக்குப் பரிகாரம் தேட வேண்டுமென்று தீர்மானித்தான். முதலில் அலிபாபாவைத் தொலைக்க வேண்டும்; பிறகு, புதிதாக வேறு துணையாட்களைச் சேர்த்துக் கொண்டு, முன் போல் வழிப்பறி, கொள்ளை முதலியவற்றை நடத்தி வர வேண்டும் என்று அவன் எண்ணமிட்டுக் கொண்டே, அன்றைய இரவுப் பொழுதைக் காட்டிலேயே கழித்தான்.

மறுநாள் காலையில், அவன் பொருத்தமான ஒரு மாறுவேடம் புனைந்து கொண்டு நகருக்குள் நுழைந்தான். முதலில் அவன் வியாபாரிகள் பலரும் தங்கக் கூடிய பெரிய சத்திரத்திற்குச் சென்றான். சத்திரத்து நிர்வாகியைக் கண்டு, அவனுடன் நீண்ட நேரம் பேசிப் பார்த்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/60&oldid=947035" இலிருந்து மீள்விக்கப்பட்டது