பக்கம்:அலிபாபா.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

அலிபாபா


 முதியவனாக விளங்குகிறான்; இவனிடத்தில் எனக்கு அளவற்ற அன்பு உண்டு. இவன் என் உள்ளத்தைக் கவர்ந்தவன்!” என்றான்.

அந்நிலையில் அவன் எழுந்து நின்று, தான் தன் வீட்டுக்குச் செல்ல விடை கேட்டான். “நான் தங்கள் அடிமை. இன்ஷா அல்லாஹ் (ஆண்டவன் விரும்பினால்) நான் மறுபடியும் ஒருமுறை இங்கு வருகிறேன்!” என்று அவன் கூறினான். அலிபாபா, அவனை வெளியே செல்ல விடவில்லை. “நண்பரே! எங்களுடன் அமர்ந்து ஒருவேளை உணவு உண்ணாமல் தாங்கள் வெளியேறுவது நன்றாயில்லை! சாப்பிட்டுவிட்டுத் தாங்கள் வீட்டுக்குச் செல்லலாம்! நாங்கள் தயாரிக்கும் உணவுகள் தாங்கள் வழக்கமாக அருந்தும் சுவையுள்ள அமுதுக்கு ஈடாக இருக்கமாட்டா. ஆயினும் எங்களுடைய திருப்திக்காகத் தாங்கள் எங்களுடன் அமுது செய்ய வேண்டுகிறேன்!” என்று அவன் ஹஸனைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

ஹஸன், “உங்களுடைய அன்புக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆயினும், நான் உங்கள் வீட்டு உணவுகளைச் சாப்பிட முடியாது. சமீபத்தில் வைத்தியர் அவ்வாறு எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்!” என்று கூறினான். “என்ன காரணத்திற்காக வைத்தியர் கட்டளையிட்டார்? என்ன உணவை உண்னக்கூடாதென்று சொல்லியிருக்கிறார்?” என்றெல்லாம் அலிபாபா துளைத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/64&oldid=512509" இலிருந்து மீள்விக்கப்பட்டது