பக்கம்:அலிபாபா.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பையனும் உணவுண்டு, சமையலறையில் போய்ப் படுக்கும் வரை நான் பொறுத்திருக்க வேண்டும். பிறகு, ஒரு நொடியில் வேலையை முடித்து விட்டு, தோட்டத்தின் வழியாக வெளியே ஓடி விடலாம்! என்று அவன் தனக்குள்ளே சிந்தித்துக் கொண்டான்.

அடுத்த அறையிலிருந்த மார்கியானா கதவின் இடுக்கு வழியாக அவனைக் கவனித்துக் கொண்டே தன் உடைகளை மாற்றிக் கொண்டிருந்தாள். நடனத்திற்குரிய சல்லடம், சரிகைத் தாவணி, மஸ்லின் முகத் திரை, காற் சலங்கைகள், பட்டுத் தலைப்பாகை முதலியவற்றை அவள் வேகமாக அணிந்து கொண்டாள். அவற்றுடன், இடுப்பில் பளபளப்பான தங்கச் சரிகையிலே செய்த அரைக் கச்சை கட்டி, அதில் ஒரு பிச்சுவாவையும் செருகிக் கொண்டாள். அப்துல்லாவைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/67&oldid=947036" இலிருந்து மீள்விக்கப்பட்டது