பக்கம்:அலிபாபா.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அலிபாபா




“அடி பாதகி என்ன வேலை செய்துவிட்டாய்! இம்மையிலும் மறுமையிலும் எனக்கு நீங்காத பழியை உண்டாக்கிவிட்டாயே!” என்று அலிபாபா அலறித் துடித்தான்.

“உங்களைக் காப்பாற்றவே இவனை வீழ்த்தினேன்! இவனுடைய அங்கியைத் துக்கிப் பார்த்தால் பழியும் பாவமும் புலனாகும்!” என்றாள் மார்கியானா.

அலிபாபா அவனுடைய உடைகளைச் சோதனை செய்தான். அவைகளின் உள்ளே நீண்ட வாள் மறைந்திருந்தது!

அப்பொழுது மார்கியானா கூறியதாவது: “இந்த ஐயாவை உங்களுக்குத் தெரியவில்லையா? இந்த வஞ்சகன் தான் உங்களுடைய பகைவன்! நன்றாக இவனை உற்றுப் பாருங்கள்! இவனே எண்ணெய் வியாபாரி; இவனே திருடர்களின் தலைவன்! உங்கள் உயிரைப் பலிவாங்க வந்த இவன், அதற்காக உங்கள் உப்பை உண்ண மறுத்தான்! நீங்கள் உணவில் உப்பைப் போடவேண்டா என்று சொன்னவுடனேயே, இவன் உங்கள் உயிருக்கு உலைவைக்க வந்தவன் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். நான் நினைத்ததே சரி என்பது ஆண்டவன் அருளால் வெளியாகி விட்டது!”

உடனே அலிபாபா, அவளுக்குப் பல முறை நன்றி கூறி, “இரண்டு தடவைகள் என் உயிரை நீ காப்பாற்றி விட்டாய்! உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும்? இன்று முதல் நீ அடிமைப்பெண் அல்லள். இப்பொழுதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/70&oldid=512531" இலிருந்து மீள்விக்கப்பட்டது