பக்கம்:அலிபாபா.pdf/71

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விருந்து, நடனம், மரணம்!

69


உனக்குச் சுதந்தரம் அளிக்கிறேன்!” என்று சொல்லி, அன்போடு அவள் கையைப் பிடித்துக்கொண்டு, “உனக்கு என் மகனையே பரிசாக அளிக்கிறேன்! உன் விசுவாசத்திற்கு நன்றியாக அவன் உன்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்!” என்றான். பிறகு, அவன் தன் சகோதரன் மகனைப் பார்த்துப் பேசிலானான் : “நீ நான் சொல்வதுபோல் நடக்க வேண்டும். இந்த மார்கியானாவையே திருமணம் செய்துகொள். கடமைக்கும், உண்மையான அன்புக்கும். இவள் எடுத்துக்காட்டாக விளங்குபவள். இவர் மாதர்குல விளக்கு. அதோ விழுந்து கிடக்கும் குவாஜா ஹஸன் உன்னிடம் நட்புக் கொண்டு உறவாடியதன் இரகசியம் இப்பொழுது உனக்குப் புரிகிறதா? உன் உயிரைப் பலி வாங்கவே அவன் உன்னைப் பற்றிக் கொண்டிருந்தான். ஆனால், இந்தப் பெண்ணுடைய மதி நுட்பமும் சமயோகிதயுக்தியும் நம்மைக் காப்பாற்றிவிட்டன!

இளைஞன், தந்தை சொல்லைத் தலைமேல் தாங்கி உடனேயே, 'தங்கள் விருப்பப்படி மார்கியானாவை மணந்து கொள்கிறேன்” என்றான்.

பிறகு, அம்மூவரும் சேர்ந்து மிகவும் கவனமாக அங்கிருந்த பிணத்தைத் தூக்கித் தோட்ட்த்திற்கு எடுத்துச் சென்று. அங்கே அதைப் புதைத்துவிட்டனர். அன்று முதல் பின்னால் பல ஆண்டுகள் கழிந்தும் அந்த விஷயம் வெளியே யாருககும் தெரியாமல் மறைந்து போய்விட்டது.

சில நாள்களுக்குப்பின் காஸிமின் மகனுக்கும் மார்கியானாவுக்கும் கோலாகலமாத் திருமணம் நடந்தேறியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/71&oldid=512532" இலிருந்து மீள்விக்கப்பட்டது