பக்கம்:அலிபாபா.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ஒருநாள் அவன் வனத்தில், காய்ந்த கொப்புகளை வெட்டி, கழுதைகளின் மேல் ஏற்றி, வீட்டுக்குத் திரும்பும் சமயத்தில், அவனுக்கு வலப்புறம் சிறிது தூரத்தில், புழுதிப் படலத்தை அவன் கண்டான். குதிரைகளின்மீது எவர்களோ வந்து கொண்டிருந்தனர். அவர்கள் திருடர்களாயிருந்தால், தன்னை வெட்டிப் போட்டுவிட்டு, தன் கழுதைகளையும் பற்றிக்கொண்டு போய்விடுவார்கள் என்று அவன் அஞ்சினான். எனவே, அவன் அங்கிருந்து ஓடத் தொடங்கினான். கழுதைகளை ஓர் ஒற்றையடிப் பாதையில் விரட்டிவிட்டு, அவன் ஒரு பெரிய மரத்தின் கிளையில் ஏறி மறைந்துகொண்டான். அந்த மரத்திற்கு எதிரில் உயரமான பாறை ஒன்று இருந்தது. மரத்தில் இருந்துகொண்டே அலிபாபா கீழே என்ன நடந்தாலும் பார்த்துத் தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/8&oldid=723061" இலிருந்து மீள்விக்கப்பட்டது