குகன் பண்பு
கம்பன் வால்மீகி ராமாயணத்தைத் தழுவியே தமிழில்: இராமாயணம் பாடினன், அதனே அவனே நன்றியறிவுடன் தெரிவிக்கிருன் தழுவலேயன்றி வார்த்தைக்கு வார்த்தை, கேர் மொழிபெயர்ப்பு என்று சொல்ல இயலாது. பல இடங்களில் அவன் மாற்றங்களேச் செய் திருக்கிருன்.. வால்மீகி முனிவர் ஓரிடத்தில் வைத்துள்ள கருத்தை வேறு. ஓரிடத்தில் வைத்து அக்தக கருத்துப் பின்னும் விளக்கம் பெறும்படி செய்திருக்கிருன்.
குசனுடைய படைப்பில் அத்தகைய முறையை மிகவும் துட்பமாக மேற்கொண்டு அவனுடைய பண்புகளில் ஒன்றைக் குறிப்பினல் அறியும்படி அமைத்திருக்கிருன் கம்பன். அதை இப்போது கவனிப்போம்.
பரதனுடைய தோற்றத்தையும் பின்பு அவன் கோக்கக் தையும் அதனல் அவன் இயல்பையும் கன்கு உணர்ந்து கொண்ட குகன் வியப்பில் ஆழ்ந்தான்; உருகினன். பிறகு, பரதன் குகனே, "இராமபிரான் தங்கியிருந்த இடம் எது: என்று கேட்டான். குகன், வீரனே, இதோ இந்த இடர் தான்; கானே காட்டுகிறேன்" என்று சொல்லி, அப் பெருமான் கற்களினிடையே விரித்த தர்ப்பைப்புல்லின்மேல் படுத்திருந்த இடத்தைக் காட்டினன். அதைக் கண்டு கண்ணிர் விட்டுப் பதைத்து வருந்திய பரதன், "இலக்குவன் எங்கே படுத் திருந்தான்?' என்று கேட்டான். இலக்குவன் தாங்குவதாவது அவன் அன்று இரவு முழுவதும் உறங்கா மல் கின்றுகொண்டே இருந்தான். குகனும் உறங்காமல்