.204 அழியா அழகு
அரக்கியர் குழுவுக்கு ஈடுவே சீதை இருப்பதைக் கண்டான் அநுமன். அரக்கியர் கரிய பெரிய உடம்பை உடையவர்கள். சீதையோ இயற்கையாகவே மெல்லிய உருவத்தை உடையவள். இப்போது மிகவும் மெலிந்திருக் கிருள.
மென்ம ருங்குல்போல்
வேறுள அங்கமும் மெலிந்தாள். '
என்று கம்பன் பாடுகிருன். உடம்பு மெலிந்திருந்தாலும் அதில் உள்ள தேசு பங்கவில்லை. ஊன் உருகிலுைம் உள்ளொளி பெருகியிருக்கிறது. அது புறம் பொசிகிறது, கூட்டமாக அரக்கியர் இருக்க, அவர்களுடைய பெரிய உடம்புகளுக்கிடையே அந்த மெல்லிய சீதையின் உருவம் சிறியதாக இருந்தாலும் பளிச்சென்று விட்டு விளங்கு கிறது. விரிந்து படர்ந்த மேகக் கூட்டத்துக்கு நடுவே பளிச்சென்று ஒரு மின்னலிழை ஓடினல் எப்படித் தெளி வாகத் தெரியும்! அப்படித் தெரிகிறது சிதையின் வடிவம். கரிய நிறம் பெற்ற அரக்கியர் குழுவில், விரிந்த மேகக் குலத்தைக் கிழித்துக்கொண்டு விளங்கும் மின்னற் கொடி யைப் போலச் சீதை இருப்பதைக் கண்டானம். இதையே இந்தப் பாட்டின் முதல் இரண்டடிகள் சொல்கின்றன
விரிமழைக் குலம்கிழித்து
ஒளிரும் மின்னனக் கருகிறத்து அரக்கியர்
குழுவிற் கண்டனன். யாரைக் கண்டான்? இதற்குரிய விடையைப் பின் இரண்டடிகளில் காண்கிருேம். இராமபிரானுடைய தேவி .யாகிய சீதையைக் கண்டான் என்று சொல்ல வருகிருன்
1. Tzrio go.T67.