பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

9

“இந்த உள்ள போய்க் கட்டிக்கோ. சுவாமிகிட்டே தட்டில் புதுப்புடவை, ரவிக்கை இருக்கு-”

வெள்ளித்தட்டில் தாமரை வர்ணத்தில் ஜரிகைக்கரை போட்ட புடவை இருந்தது. ரவிக்கை இருந்தது.

நெற்றிக்கு இட்டுக் கொண்டவுடன் திரும்பி சுவாமி படங்களைப்பார்த்தாள். மூக்கில் நத்து சிரிக்க சாரதாம்பிகை நடு நாயகமாய்க் கொலுவிருந்தாள். சந்திரகலை, அக்ஷமாலை,சுவடி வேறு அப்பா! அம்பாளின் சுரங்களில் எதுதான் பொருந்தவில்லை. கரும்பு வில்லும், கிளியும், பாசாங்குசமும் எல்லாமே பொருத்தம்தான்.

நெற்றி கரையில்பட விழுந்து நமஸ்கரித்தாள். படத்தில் தொங்கிய சண்பக மாலையைக கிள்ளி எடுத்து முடிந்த கூந்தலில் தொங்கவிட்டபடி வெளியே வந்தாள்.

அந்தத்தெருவின் பெண்கள் ஏதோ சாக்குவைத்துக் கொண்டு வந்து வந்து போனர்கள். கங்கம்மாவின் கிட்டே போய் தாழ்ந்த்குரலில் நர்மதாவின் அழகை வர்ணித்தார்கள்.

கூடத்தில் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த பட்டப்பாவை ஒருத்தி சீண்டினாள்.

“இன்னிக்கி எங்காத்துலே பூக்கற குண்டு மல்லிப் பூவைப் பறிச்சுண்டு வந்து..”

“ஹீ..ஹி...” என்றான் பட்டப்பா,

“வாடி போகலாம். அதுக்கு ஒண்ணும்புரியலை-” என்றாள் இன்னொருத்தி.

“இவனுக்குப் புரிஞ்சா என்ன புரியாட்டா என்ன? அவ புரியவச்சுட மாட்டா? ஹாம் தங்கசிலையாட்டமா அப்படி ஒரு மினு மினுப்புங்கறேன்-” சாப்பாடுஆயிற்று. கட்டித்தயிரைஊற்றி கைவழிய சாப்பிட்டு எழுந்தபோது நர்மதாவுக்கு ஊரில் அம்மாவின் நினைவுவந்தது. யார் வீட்டிலோ அடுப்படியில் நாள் பூராவும் வேகு வேகு என்று வெந்து கொண்டிருக்கிறாளே.

பகல் தூக்கத்தில் கனா கூட வந்தது. பட்டப்பா அவளிடம் நெருங்கி வந்து..அப்பாடா! எப்படி வேர்த்துக்கொட்றது?...