பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அவள் விழித்திருந்தாள்


3

நர்மதாவுக்குக் கல்யாணம் நடந்ததே ஒரு கனவு மாதிரி இருந்தது. “இந்தப் பெண்ணுக்கு எப்ப விடியப்போறதோ” என்று சொல்லிக்கொண்டேதான் நர்மதாவின் தாய் வெங்குலட்சுமி காபி காலையில் எழுந்திருக்கிற வழக்கம். பழையதுக்கும் எரிச்ச குழம்புக்கும் இப்படியொரு வளர்த்தி இருக்க முடியுமா என்பது ஆராயப்பட வேண்டிய விஷயம். பத்து குடித்தனங்களுக்கு நடுவில் நர்மதாவை இளவட்டங்கள் கண்களாலேயே கொத்திக் கொண்டிருந்தனர், அதிலே சாயிராம் என்று ஒருந்தன். இவளை எப்படியாவது சினிமாவில் சேர்த்து விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தான்.

“நர்மதா! ஒரு டம்ளர் பானை ஜலம் கெடைக்குமா? நர்மதா! சூடாகாப்பி இருந்தா கொடேன்” என்று சொல்லிக் கொண்டே உள்ளேவந்து உட்காருவான். வெங்குலட்சுமிக்கு பற்றிக்கொண்டு வரும். சந்தனச்சிலைக்கு தைத்துப்போட்ட மாதிரி கைபிதுங்கி வழிய ரவிக்கை போட்டுகொண்டு அவனுக்கு பானை ஜலமும், சூடான காப்பியும் கொண்டு வந்து கொடுப்பாள் நர்மதா, அவன் தயவு அவர்களுக்கு வேண்டி இருந்தது. பெரிய பெரிய புள்ளிகள் அவனுக்கு சிநேகம். அவர்களின் வீட்டில் சமைக்க சிபாரிசு செய்து அனுப்புவான்.

“நீயும் கூடப்போயேன் நர்மதா” என்பான் சாயிராம்.

எல்லாங்கிடக்க அவ எதுக்கு..

“வரட்டும் மாமி! நாலு பெரிய மனுஷாளை தெரிஞ்சுண்டா நல்லதுதானே?”

“அவ எந்த மனுஷாளையும் தெரிஞ்சுக்க வாண்டாம்-”

நர்மதாவுக்கு சினிமா என்றால் உசிர். ஓசிப் பாஸ் கொண்டு வந்து கொடுப்பான் சாயிராம்.