பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

26


6

இப்படியே பல இரவுகள் போயின. வெறும் நெருக்கம்தான் வேறே ஒண்றும் இல்லை. அத்துடன் அவன் தூங்கி விடுவான். இவள் தனக்குள் வெந்து கொண்டிருந்தாள். பெருமூச்சுகள் கண்ணீர், விரக்தி என்று அவளை வாட்டி எடுத்தது. புதுச்சேலை கட்டுவதில்லை. அதிகமாய் பூ வைத்துக் கொள்வதில்லை. முகத்திலே ஏக்கம் ததும்பி நின்றது.

ஊரிலிருந்து அம்மா கடிதம் போட்டிருந்தாள்.

“நீ குளிச் சிண்டு இருக்கியா? சமத்தா நடந்துக்கிறியா? கங்கம்மாவின், மனசு கோணாமல் நடந்துக்கோ... நான் முடியறச்சே உன்னே வந்து பார்க்கிறேன். உன் அண்ணுவும் மன்னியும் இப்போ சினிமா பார்க்கிறது அதிகமாயிடுத்து. ஒரு நாளைக்கு கொறஞ்சது இரண்டு படத்துக்காவது போயிண்டிருக்கா”

நர்மதா கொல்லையில் உட்காரும் போதெல்லாம். கங்கம்மா முகம் சிணுங்கினாள், “ஏழுமலைவாசா! இப்படிஏன்னை சோதிக்கிறியே. இந்த வீட்டிலே ஒரு குழந்தை விளையாடக்கூடாதுன்னு உன் எண்ணமாக்கும்?”

பூரணி மசக்கை என்று சொல்லிக்கொண்டு ஏகப்பட்ட ரகளை பண்ணிக் கொண்டிருந்தாள். கங்கம்மா மாங்காய்த் தொக்கும், மிளகாய்ச் சட்டினியுமாய்ப் பண்ணி நர்மதாவிடம் கொடுத்தனுப்புவாள்.

“பாத்துக்கோ! அவளுக்குக் கல்யாணமாகி இரண்டு வருஷம்தான் ஆச்சு. அவள் சமத்தைப் பாத்துக்கோ. அவளண்டைகேட்டுத் தெரிஞ்சுக்கடி புருஷன் கிட்டெ எப்படி நடந்துக்கிறதுன்னு. அவன் வேணும்ங்கச்சே நீ வேண்டான்னு இருப்பே. நீ வேணுங்கச்சே அவன் வேண்டாம்னு இருப்பான் போல இருக்கு. ஏறக்கொறைய எங்கதைதான்... பண்ணின பாவம் என் தலைலே இப்படி விடிஞ்சிருக்கு”