பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

29

“உனக்கும் கூடிய சீக்கிரம் மசக்கை வரணும்னு ஆசீர்வாதம் பண்ணவா? இல்லை லேட்டா வரணும்னு ஏதாவது ஃபாமிலி ப்ளானிங்லே இறங்கி இருக்கீங்களா?” என்று துணிச்சலாகக் கேட்டான் பாலு.

நர்மதாவுக்கு வாயைவிட்டு ‘ஓ’ வென்று அழவேண்டும் போல இருந்தது. எப்பவுமே ஃபாமிலி ப்ளானிங்தான்னு கத்தவேண்டும் போல இருந்தது. வெட்கமாக இருந்தது. வேதனையாக இருந்தது. சில விஷயங்கள் நெஞ்சுக்குள்ளே அகப்பட்டுக்கொண்டு வெளியே வரமுடியாமல் முரண்டு பண்ணும். இந்த விஷயம் அடி வயிற்றிலேயே புகுந்து கொண்டு கிடந்தது.

பூரணி ‘ஹோவ்’ என்று கொட்டாவி விட்டாள். விரல்களைச்சொடுக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். பெண்களுக்கு மசக்கை வந்து விட்டால் புருஷனைக் கவனிப்பது குறைந்துவிடும். வயிற்றில் வளரும் சிசுவின்மீதே ஞாபகம். ஆணா, பெண்ணா, கருப்பா சிவப்பா? ரொம்ப வலிக்குமா? கத்த வேண்டியிருக்குமா? என்று பல கேள்விகள். ஆராய்ச்சிகளில் நினைவு மோதிக்கொண்டிருக்கும்.

“சாப்பிட்டாச்சா?” என்று கணவனைக் கேட்டாள்.

“ஓ! உன் சிநேகிதி பரிஞ்சு பரிஞ்சு சாதம் போட்டாள்.”

“அப்படியாடி? எனக்கும் கையிலே பிசைந்து போடேன்” நர்மதாவும், பூரணியும் சாப்பிட்டார்கள்.

“ஏண்டி! ஒரு மாதிரியா இருக்கே”

“ஒண்னுமில்லை”

“எங்கிட்டே மறைக்கிறே. பட்டப்பா உங்கிட்டே ஆசையா இருக்கானோல்லியோ?”

அவள் மெளனமாக இருந்தாள். பாலு படுக்கையில் படுத்தபடி பேப்பர் படித்துக்கொண்டிருந்தான்.

“சொல்லேண்டி...ரொம்ப இளைச்சுப்போயிட்டே”

“போனாப்போறேன். எப்படியோ இந்த உலகத்திலேருந்து போனச்சரி...”

“சீ..சீ.வாயப்பாரு...எங்கிட்டே செல்லேண்டி”

“ஒரு ஆசையுமில்லை, ஒரு மண்ணுமில்லை. கல்லுக்காவது