பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

அவள் விழித்திருந்தாள்

கசிவு இருக்கும். ஈரம்இருக்கும். இந்த மனுஷன் ஒண்னும் பிரயோஜனமில்லை.”

பாலு தூங்குவதுபோல இருந்தான்.

“அடடா! காட்டிலே காய்கிற நிலாதான்... அதான் இந்தப்பண் வாடி வதங்கிப்போயிருக்கு” என்று நினைக்துக் கொண்டான்.

பூரணி திடுக்கிட்டுபோய் உட்கார்ந்திருந்தாள். பெண்கள்தான் பல விதங்களிலும் கோளாறுகள் உள்ளவர்கள் என்று தீர்மானித்து இந்தச்சமூகம் அவர்களையே ஏசிக்கொண்டிருக்கிறதே. ஆண்களின் சரீர அமைப்பிலும் எத்தனையோ கோளாறுகள் இருக்கக்கூடும் என்பதை வைத்தியர்கள் தவிர மற்றவர்கள் தெரிந்து கொள்வதுமில்லை. அதைப் பற்றி சந்தேகப்படுவதுகூட இல்லை.

கொஞ்சநேரம் அங்கே மெளனம் நிலவியது.

“நான் போயிட்டு வரேன்” என்றபடி நர்மதா கிளம்பினாள்.

பாலு அரைக் கண்களால் அவளை முழுமையாகப் பார்த்தான். நன்றாகப் பார்த்தான்.

பூரணிக்கு திகைப்பு அடங்கவே சிறிதுநேரம் பிடித்தது. ரொம்பவும் முன்னேறி விட்டோம். “விமன்ஸ் லிப்” என்றெல்லாம் வாய் கிழிய பேசும் இந்த நாட்களில்கூட படித்த பெண்கள் தங்களுக்குக் கல்யாணம் என்றால் பூம் பூம் மாடுகள் மாதிரி பிள்ளை வீட்டார் கேட்கிற அசட்டுக் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு, பாடத்தெரியாவிட்டாலும் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எங்கோ ஒன்றிரண்டு பெண்களுக்குத்தான் துணிச்சல் இருக்கிறது. “பாடத்தெரியாது” என்று சொல்கிறார்கள்.

நர்மதா பட்டப்பாவிடம் என்ன கேள்விகள் கேட்டிருக்கப்போகிறாள்?

நன்றாக மூன்று வேளைகள் சாப்பிட, விதவிதமான துணி கட்ட, நகைகள் பூட்டிக்கொள்ள வசதியான குடும்பம் பையன் வெளித்தோற்றத்தில் பெண்மைகலந்த ஆணாக இருந்தான். ஆண்மை கலந்த பெண்கள் இல்லையா என்ன? அட்டமும் சட்டமுமாகப் உயரமாய் எத்தனை பெண்கள் ஆண்களே மிஞ்சிய ஆண் தோற்றத்துடன் இல்லை. அப்படி ஆணும் பெண்களைப்போல இருக்கிறான்.