பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சரோஜா ராமமூர்த்தி

31

இனிமேல் இந்தப் பொண்ணுக்கு விடிவு காலம் ஏற்படப்போறதா? எப்படி? இவனை விட்டு விட்டு ஒடிப்போவதா? ?வெட்டியாகப் பிறந்த வீட்டுக்குப் போய்விடுவதா? அங்கே என்ன கொட்டி வைத்திருக்கிறது? கழுத்திலே தாலியும், காலிலேமெட்டியும் குலுங்கினால் கூட அந்தப்பெண் வேறு இடத்தில் ஒதுங்கினால் சைட் அடிக்கிற காலம் இது.

ராமராஜ்யமா பாழாய் போகிறது?

பூரணி குலுங்கி அழுதாள். பல விதங்களில் வெள்ளைக்காரர்கள் தேவலை. உண்டு இல்லை என்று கத்தரித்துக்கொள்வார்கள். இங்கே தர்மம் என்று ஒன்று இருக்கிறது. அதுவும் பெண்களுக்கு என்று பிரத்யேகமாக விதிக்கப்பட்ட ஸ்திரீ தர்மம். இதன் பெயரில் இதன் நிழலில் எண்ணற்ற கொடுமைகள் பெண்களை எதிர் கொள்கின்றன.

பாலு இப்போது நன்றாக விழித்துக் கொண்டான். அவன் சாப்பிட்டு அரையே முக்கால் மணியே ஆகியிருந்தாலும் “பாக்டரி” க்குக் கிளம்புமுன் சூடாகக் காப்பி சாப்பிட வேண்டும்.

பூரணி பொன் நிறத்தில் நுரை தளும்ப காப்பியை ஆற்றியபடி முத்து முத்தாத வியர்க்கும் வியர்வை நெற்றியுடன் அவனிடம் காப்பி தரும்போது அவன் அவள் அழகில் லயித்துப் போவான். லேசாக “சென்ட்” கமழும் கை குட்டையால் வியர்வையை ஒற்றி விடுவான். கன்னத்தைக் கிள்ளுவான்.இன்னும் இத்யாதி இத்யாதி.

இன்று பூரணி கண்களில் கண்ணீர் பெருக உட்கார்ந்திருந்தாள்.

பாலு எழுந்துபோய் முகம் கழுவிக்கொண்டு வந்தாள். உடுத்திக்கொண்டான்.

“காப்பி டியர்”

“கான்ட்டீன்லே சாப்பிடுங்கோ. எனக்கு உடம்பு சரியில்லே”

“சிநேகிதியோட பேசிண்டிருக்கச்சே நன்னாத்தானே இருந்தே. கமான்! நீ போடற காப்பிதான் வேணும்” “என்னாலே முடியாது முடியாது... இதென்ன நொள்ளை அதிகாரம்?

பொம்மனாட்டினா புருஷன் அதிகாரம் பண்ணித்தான் தீரணுமா?”