பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அவள் விழித்திருந்தாள்

“காப்பி கேட்டால் அதிகாரமா? ப்ச்... உனக்கு ‘மூட் அவுட்’ நீயும் உன் சிநேகிதியும் பேசின ரகசியம் எனக்கும் கேட்டுது. பட்டப்பா ஈஸ் நாட் பிட் இனப்”

“ஐயோ, ஐயோ! இரைஞ்சு பேசாதீங்கோ. நர்மதா வந்து தொலையப்போறா...பாவம்,”

“என்ன பாவம்? போடா முண்டம்! என்று விட்டு வெளியே நடக்கட்டும். இஷ்டமானவனோட இருந்துட்டுப் போறா...”

“என்ன? என்ன? இஷ்டமானவனேட இவள் இந்த முண்டம் கட்டின தாலியோட இருந்துட்டுப் போகட்டும். எத்தனை நாளைக்கு, எத்தனை மாசம், எத்தனை வருவுங்களுக்கு? அப்புறம்?-”

பூரணியின் கண்களில் ஆத்திரம் கொந்தளித்தது.

விவாக பந்தத்தில் தோற்றுவிட்ட ஒரு பெண்ணின் எதிர்காலம் எத்தனை இருள் சூழ்ந்ததாக இருக்கிறது? அவள் தன் நியாயமான ஆசைகளை கருக்கிக்கொண்டு படித்து வேலைக்குப் போய்ப்பிழைத்துக் கொண்டால், ஒரு வேளை இந்த சமூகம் ஒத்துக் கொள்ளலாம். பாலு சொல்வதைப் போல இருப்பதை...

“காப்பி நான் போடறேன்” என்று பாலு காசைப் பற்றவைத்தான். பாலைச்சுட வைத்து இரண்டு தம்ளர்களில் காப்பி எடுத்து வந்தான். கோபப்பட்டு சிவந்துபோயிருந்த மனைவியை பரிவுடன் அணைத்தவாறு காப்பியை அவளிடம் கொடுத்தான். இருவரும் சிரித்தார்கள்.

அன்று அரைநாள் “பாக்டரி” க்கு மட்டம். வாசலில் நிழல் தட்டும் போதெல்லாம் அவன் நர்மதாவை எதிர்பார்த்தான்.