பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அவள் விழித்திருந்தாள்

“அப்ப அவ கழுத்துலே ஏன் சுருக்கு கயிர் மாதிரி போட்டே”

அவன் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். முகம் பூராவும் வியர்த்து விட்டது. மழ மழ வென்று பெண்மையான முகம்.

“மருந்து சாப்பிட்டா சரியாயிடும்னு சொல்றேளா?”

“எனக்குத் தெரியாது அப்பா. டிரை பண்ணுன்னேன். இந்த மாதிரி விஷயங்கள்ளே மனசைச் செலுத்திப்பாரு. கோயில் குளம், புராணம், இதிகாசம்னு போயிண்டிருக்காதே. இருக்கிற கொஞ்ச நஞ்சமும் போயிடும்”

“அப்ப அவளப்போய் அழைச்சுண்டு வந்துருவா?”

“பேஷா... அவ இல்லாம நன்னாவே இல்லை. இல்லியா?”

“ஆமாம் சார்... நாளைக்குப் போறேன்”

பட்டப்பா அயல் நாட்டு “சென்ட்” மணம் கமழ நர்மதாவைத்தேடி வந்தான். இதற்குள் இங்கே நர்மதாவின் வீட்டில் ஒரு பிரளயமே வந்தது. சாயிராம் தினம் வர ஆரம்பித்தான். ஜாதி மல்லிகையிலிருந்து புடவை ரவிக்கை என்று வாங்கி வந்தான்.

நர்மதா அவளையும் அறியாமல் மாலை நேரங்களில் அவன் வருகையை எதிர்பார்த்தாள். அழகு படுத்திக்கொண்டாள். அடிக்கடி தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

“ஒரு விதத்தில் நான் நன்றாக ஏமாந்தவள். இனி நான் என் உணர்ச்சிகளை ஏமாற்ற விரும்பவில்லை.”

சாயிராம் உயர் வகுப்புக்கு இரண்டு சினிமா டிக்கட்டுகள் வாங்கி வந்தான். “கிளம்பு கிளம்பு போகலாம்”

“அம்மா வர்ற நேரம்”

“அவபாட்டுக்கு வந்துட்டுப்போறா. நான் என்ன அசலா அன்னியமா? ஒண்னும் சொல்லமாட்டா சீக்கிரம் கிளம்பு”

நர்மதாவுக்கு பயமாக இருந்தது. ஏதோ அசட்டுத் துணிச்சலில் உள்ளே போய் உடை மாற்றிக்கொண்டாள். அவள் வாசல் பக்கம் வரவும் நர்மதாவின் அம்மா உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.தெருக்கோடியில் போய் நின்றுகொண்டிருந்தான் சாயிராம்.

“எங்கேடி கிளம்பரே?”