பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அவள் விழித்திருந்தாள்

“இந்த மாதிரி ஜோடி சேர்ந்திருந்தா தேவலை”

இப்படியே மூணு நாளும் கங்கம்மா ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தாள். அப்புறம் ஒய்ந்து விடுவாள். இந்த கெடுவுக்கு மேல் இனிமேல் குளிக்கமாட்டாள் என்று நினைப்போ என்னவோ.

குளித்த அன்று தலை கொள்ளாத ஜாதி மல்லிகையும், அலங்காரமுமாகத் திகழ்ந்தாள் அவள். “ஸ்வாமிக்குப்பால் நைவேத்யம் பண்ணிட்டு அவன் பிரசாதமாக உள்ளே எடுத்துண்டு போ. சரியா நடந்துக்கோ.”

கொஞ்சம் கூட தம்பியின் மேல் சந்தேகம் வரவில்லை அவளுக்கு. எல்லா பழி பாவங்களும் பெண்களைச்சார்ந்தவை என்கிற குருட்டு நம்பிக்கையாகவும் இருக்கலாம்.

பாலு வேலைக்குப் போகாத நாட்களில் இவர்கள் வீட்டுக்குச் சாப்பிட வந்தான்.

“பூரணி இல்லாம ரொம்ப இளைச்சுட்டே” என்று கங்கம்மா அவனுக்கு உபசாரம் செய்தாள்.

“உன் பொண்டாட்டியோட இவளும் போட்டிபோடணும்னு பார்க்கிறேன். இவளானால் மாசம் தவறாம கொல்லையில் போய் உட்காந்துடறாள்.”

“கொஞ்சநாள் போட்டமே. இப்ப என்ன அவசரம்? கொஞ்சம் ப்ரீயா இருந்துட்டுப்போறா” என்றான் பாலு அழுத்தமான சிரிப்புடன்.

“போகலாம்தான். ஆனாக்க எனக்கு வயசாயிண்டு வரதேப்பா, அடிக்கடி தலையைச் சுத்தறது. படபடப்பா வேறே இருக்கு. எதுவுமே காலத்துலேபூக்கனும்,காய்க்கணும். கொல்லையிலே பாரிஜாத மரத்தைப் பார்த்தியோ? ஒரு தத்தல், வர்ஷிக்க வேண்டியதுதான். பூவாப் பூத்துக்கொட்டறது. ஏன் கதை வேறே. கிழவனைக்கட்டிண்டு...என்னத்தைக்கண்டேன். இவா இப்படியில்லையே.”

பாலுவிக்கு அவள் பேரில் இரக்கமாக இருந்தது. “பகவான் தான் வழி காட்டணும்” என்று பரமார்த்தமாக, சாதுவாகச் சொல்லிக்கொண்டே கிளம்பினான்.

அன்றைக்கு என்னவோ விசேஷம், போளி பண்ணியிருந்தாள் கங்கம்மா. சமையலறைக்குள் போனவள், அடடே! அந்தப் பையனுக்கு நாலு குடுத்திருக்கலாமே! மறந்து