பக்கம்:அவள் விழித்திருந்தாள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சரோஜா ராமமூர்த்தி

Ꮾ5



"பின்னே" 'ரொம்ப கஷ்டம். வாழ்ந்து அனுபவிச்சவாளாலேயே முடியாது."

"முடியத்தான் இல்லை. அதுவும் அந்த மனுஷன் அடிக்கடி ஞாபகப்படுத்தி விடறார்; தன் இயலாமையைச் சொல்லிச் சொல்லி."


"பாவம் பேசாம இருந்திருக்கலாம்' "உம் இப்படி எத்தனையோ பேர் ஏமாந்திருப்பா.அதுலே நானும் ஒருத்தி. இல்லே ரகசியமா யாரோடயாவது சினேநகம் வச்சிண்டிருப்பா"

பூரணி பல்லைக்கடித்தபடி சொன்னாள். "அப்படித்தாண்டி செய்யனும். இவன் என்ன பண்ணிப் பிடுவான்."

இருவரும் மாலை மங்குகிற நேரத்தில் கிணற்றங்கரையில் பேசிக்கொண்டிருந்ததை பட்டப்பா கேட்டுக் கொண்டு வந்தான்.

'உண்மைதான். அவள் எப்படி நடந்துக்கொண்டாலும் கேட்பதற்கு எனக்கு என்ன அதிகாரம் இருக்கு. அவ பாலுவோட சிநேகமா இருக்கலாம். ஊரிலிருக்கிற சாயிராமோடவும் இருக்கலாம். தப்பே கிடையாது. மனைவி பிரசவத்துக்குப் போயிருந்தால் ஊர்மேயும் ஆண்கள் கூட்டத்தை மன்னிக்கும் சமூகம், இதைக் கேட்டால் அலறித்துடிக்கும்.'

நர்மதா வழக்கம்போல பால் டம்ளருடன் உள்ளே வரவில்லை. அந்த நாடகமெல்லாம் ஒய்ந்துபோய் மூன்று மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது.

படுக்கையை எடுத்துத் தரையில் போட்டுக்கொண்டாள். நர்மதா!'

'உம்..."

'உங்கிட்டே ஒண்னு சொல்லணும். உனக்கு சுதந்திரம் கொடுத்திருக்கேன். நீ இஷ்டபடி இருக்கலாம். இப்ப் அக்கா அக்கும் வாயடைச்சுப்போச்சு'

"என்ன சொல்றேள்?"