பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



யோக்கியதைன்னுட்டேன். என்ன தமிழ் வாழுது. எல்லாம் குடிகாரக் கூட்டம். ஆனா, பாரதிதாசன் மாதிரி ஒரு கவிதை எழுத முடியும்னா எனக்கு, நான் குடிக்கத் தயார். தேவுடியா வீட்டுக்குப் போகத் தயார். இப்படீன்னு சொன்னேன். அவன் மாதிரி ஒரே ஒரு பாட்டு. அம்மாம் பெரிய நூல் எழுதறவன் நீ. ஒரே ஒரு பாட்டு. பார்த்தசாரதி உன்னுடைய குறிஞ்சி மலரும், என்னுடைய நூல்களும், நம்ம மண்டையோட காலி. இப்படியே சொன்னேன். ஆனால் தமிழ் இருக்கிறவரைக்கும் பாரதிதாசன் இருப்பான். அவன் குடிச்சான்கிறது பிரச்சினை இல்ல. குடிச்சான். ஆனா, அவனுடைய படைப்பு இருக்கிறதே, தமிழ் இருக்கிற வரைக்கும் இருக்கும். அந்த மாதிரி ஒரு பாட்டு எழுதக் கூடுமா? இன்னைக்கும் சொல்றேன். எத்தனை குற்றமும் மறைவா இல்ல. பாரதிதாசன் மறைவா எதையும் செய்யல. எல்லா ஒபனாகத்தான் செய்தான். நான் ஒபனா செய்யத் தயார். திட்டுதிட்டுனு திட்டிப்புட்டேன். பிள்ளைகாளென்றாள்; பிள்ளைகள் வந்தன. போதும்டா Compare பண்ணுடா. உன்னுடைய குறிஞ்சி மலர் முழுவதிலேயும் இப்படி ஒரு வாக்கியம் எடுடா. போதும் ஒரு வார்த்தைக்குக்கூட அகராதி தேவையில்ல. பார்த்தசாரதி. பிள்ளை காளென்றாள் பிள்ளைகள் வந்தன. அவ்வளவுதான். குடும்ப விளக்கு. இந்த மாதிரி போட்டு வாங்குன வாங்குல. என்ன அவமானப் படுத்தணும்னே நீங்க பண்ணிட்டிங்கன்னு சொல்லிட்டு கோவிச்சுக்கிட்டுப் போயிட்டான். நா.பா. சரித்தான் போடான்னுட்டேன். ராத்திரி 2 மணி இருக்கும் போன் அடித்தது. எனக்கு நண்பர்கள் இரண்டு பேர் அமெரிக்காவுல இருக்காங்க. அவங்கதான் நேரம் கெட்ட நேரத்துல கூப்பிடுவாங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/100&oldid=481846" இலிருந்து மீள்விக்கப்பட்டது