பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்95



118. புதுமைப்பித்தனை நீங்கள் நேரிலே பாத்திருக்கீங்களா?

ஆம.

119. பேசியிருக்கீங்களா?

புதுமைப்பித்தனுக்கு ரொம்ப வேண்டியவர் எங்கள் டி.கே.சி. புள்ளை தீத்தாரப்பன். தீத்தாரப்பன் எனக்குச் சொந்தக்காரன். ஆகையினால் 2-3 தடவை பேசியிருக்கேன். அவருகூடப் பேசும்போது அரை மணி நேரம் முக்கா மணி நேரம் பேசியிருக்கேன். அவன் ஒரு படைப்பாளின்னு எவனும்கூட ஒரு கனவுகூடக் கண்டுருக்க மாட்டான். அந்த மாதிரி. ஏதாவது வேடிக்கை செய்து கொண்டு இருப்போம். இவங்கள்லாம் ஒரு ரகம். இவங்களையெல்லாம் compare பண்ணுவதற்கு எடை போடுவதற்கு நமக்கு யோக்கியதை இல்லை, தகுதியும் இல்லை. முடிஞ்சா அப்ரிசியேட் பண்ணுங்க. இல்லையா, தெரியாதுன்னு விட்டுட்டுப் போங்க. நம் கெஜக்கோல் அவனைப் போட்டு எடுத்து, அவன் குடிக்கிறான், அதப் பண்ணுறான், இதப் பண்ணுறான், புகையிலை போடுறான். சிகரெட் குடிக்கிறான். இதெல்லாம் என்ன? ஒரு கப் காப்பிக்காக அவன் பட்டு இருக்கிற பாடு நெஜ வாழ்க்கையில...

120. புதுமைப்பித்தன் ரொம்பக் கஷ்டப்பட்டுருக்கிறாரு...

ஆம். யார் அவனை அறிந்துகொண்டார்கள், அப்படிப் பார்க்கப் போனால் பெரியாள்க எல்லாமே அப்படித்தான். ஏன் என்றால், அவர்கள் வணங்க மாட்டார்கள்; சொரிந்துவிட மாட்டார்கள்.

கடைசிக் காலத்துல சினிமாவுக்கு வந்தாரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/103&oldid=481851" இலிருந்து மீள்விக்கப்பட்டது