பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



ணும். நல்லாத்தான் இருக்கான் இருந்தாலும் இதெல்லாம் பாருங்க இதெல்லாம் பண்ணனும். சாப்பாட்ட கொஞ்சம் குறைச்சுக்கங்க- அப்படின்னு சொன்னாச் சரி. அது போல குறிக்கோளும், தொண்டும் தேவை. குறிக்கோளும் தொண்டும் இல்லாத நாடாயிற்று. இப்ப, தொண்டு இல்லை; அதத்தான் கொண்டு வந்து சேர்க்கிறான். தொண்டு without இறை பக்தி குட்டிச்சுவர்.

134. குறிக்கோளுங்கிறதுக்கும் தொண்டுங்கிறதுக்கும் என்ன வித்தியாசம்?

தொண்டே குறிக்கோள். தொண்டு இல்லாத குறிக்கோளும் இருக்கலாமில்லையா. மலைமேல் உட்கார்ந்துக்கிட்டுத் தவம் பண்ணுறான். அவனுக்குக் குறிக்கோள் இல்லையா?

135. மணிமேகலையையும், பெரிய புராணத்தையும் பார்க்கும் போது பெரிய புராணத்தின் நடை வந்து கம்பருக்கு...

நடையையே விட்டுவிடுங்கள் அந்த ஆராய்ச்சியே வேறு. We are talking about totally different concepts, இப்ப இவருக்கு என்ன என்றால், தமிழ் மக்கள் மனத்திலே தொண்டு உணர்ச்சியைப் பரப்ப வேண்டும். அதுக்கு ஒருத்தன் அம்பட்டன். ஒருத்தன் வண்ணான், . அவன் இவன் சட்டி பண்ணிக் கொடுத்தான் கோவணம் பின்னிக் கொடுத்தான். இதெல்லாம் பொருந்துமா? என்ன சம்பந்தம்! ஒன்றாக இதெல்லாம் சேர்க்கிறார். எப்படீன்னா அத்தனை பேருக்கும் தொண்டுதான் common cause. சட்டி பண்ணிக் கொடுத்தவனும் தொண்டுன்னுதான் கொடுத்தான். அந்தக் common cause எடுத்து ஒன்றாக்கிவிட்டார். ஆகவே, அவருடைய இது நாட்டு மக்களுக்குப் புகுத்த வேண்டிய ஒரு குறிக்கோள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/110&oldid=987475" இலிருந்து மீள்விக்கப்பட்டது