பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



இங்க வந்து குஷ்டரோக ஆஸ்பத்திரியில புண்ணைக் கழுவுகின்றாள். பெண்டாட்டி பக்கத்துல வரமாட்டேங்கிறா, அவ அரை மைலுக்கு அந்தாண்ட நிக்கறா. இவள் புண்ணைக் கழுவுறா. எப்படிக் கழுவுறா? அமெரிக்காவில் கோடீஸ்வரியா பிறந்தவள் இங்க வந்து புண்ணைக் கழுவுறாளே, என்னன்னா கோவிந்த சாமியினுடைய உடம்பு குஷ்டம் என்று நினைக்கல அவள். இயேசுநாதரா நினைக்கிறாள் அவ. அந்த ஜீஸஸ் குஷ்ட ரோகியைக் கழுவுனாரு பாரு, அந்த ஜீஸஸ்ஸ நினைச்சுப் பண்றா. அதைத்தான் நாயன்மார்களும் செய்தார்கள்.

137. பெரியபுராணம் படிக்கிறவங்களுக்குத் தொண்டு மனப்பான்மை வரணும்.

ஆமாம் வரனும், அது மட்டுமல்ல. அடியார்களுக்குச் சோறு போட்டான் என்றால், அடியார்கள் என்று தப்பா அர்த்தம் பண்ணாதீங்கன்னு சொன்னாங்க. அதுக்கு அர்த்தம் சொன்னார்: தெருவில் நேரே வந்தோர் யாவராயினும் - தெருவிலே யாரு வந்தாலும் சரி, - அவனை அழைத்துச் சோறு போட்டான். பாடுறாரு சேக்கிழாரு. படிக்கல ஒழுங்கா. அதுதான் தெருவில் நேர வந்தவர் யாவராயினும் என்றால் இதைவிட விளக்கமா யாரால் என்ன சொல்ல முடியும்? புத்தன் வருவான். சமணன் வருவான். அய்யங்கார் வருவான். கடவுளே இல்லேங்கிற பெரியாரு வருவாரு. எவனாயிருந்தாலும் சரி போ சாப்பிடு. இதுதான் பெரிய புராணத்தோட உயிர்நாடி.

138. மணிமேகலை இந்த மாதிரி எதுவும்...

அவர் செய்யவில்லை அதை அட்சயப் பாத்திரம் கதையில வருதே தவிர. அய்யோ, அவன் கேலி பண்ணுறதும் இது பண்ணுறதும் எல்லாத்தையும் சமயக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/112&oldid=481860" இலிருந்து மீள்விக்கப்பட்டது