பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



கொண்டு எழுத்தது. பாடல் எழுந்த இடத்தைக் கானகம் செல்லுதற்கு முந்தியதாகக் கருதி அ.ச.ஞா. விடை அளித்துள்ளார். ஆனைக்கும் அடி சறுக்கும் தானே!)

9. நாட்டுப் படலத்திலேயே,

பொற்பில் நின்றன. பொலிவு; பொய்யிலா
நிற்பின் நின்றன நீதி; மாதரார்
அற்பின் நின்றன அறங்கள்; அன்னவர்
கற்பின் நின்றன கால மாரியே

...என்ற பாடலில் முதல் இரண்டு அடிகள் ஆண்களுக்கும், பின் இரண்டு அடிகள் பெண்களுக்குமாகச் சொல்லப் பெற்றன என்ற கூற்று உண்டு. இந்தப் பாடலை எல்லோருக்குமே பொதுவாகக் கொள்வதா அல்லது பெண்களுக்கு மட்டுமே, ஆண்களுக்கு மட்டுமே என்று இரண்டு பேரையும் பாகுபடுத்திப் பாடப்பெற்ற பாடலா இது?

இந்த நாட்டிலே சங்ககாலத்திலே யிருந்து ஏதோ ஆண்களுக்குச் சொன்னால் அது பெண்களுக்கும் உரியது என்ற கொள்கை வலுவாக நிலைத்திருக்கிறது. திருக்குறளிலே ஆண்மக்களுக்குச் சொல்லப்பட்டது எல்லாம் ஆண்மக்களுக்கு மட்டுமன்று, பெண்மக்களுக்கும் என்று எல்லோரும் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாடலிலே உள்ள நான்கு அடிகளும் இருபாலாருக்கும் பொதுவானது என்பதிலே எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை. பொதுவாக இருப்பினும், மூன்றாவது அடியிலே வருகின்ற ஒன்று பெண்களுக்கு என்று தனிப்படக் கூறுகிறார். காரணம், உபசரிக்க வேண்டியது. இல்லற தர்மத்தை நடத்துவது அவர்களது கடமையாதலால் இதனைத் தனியே எடுத்துச் சொல்கிறார். இது- கம்பன் சொல்வது சரிதான் என்பதற்கு ஆற்றுப் படல (பால காண்டம்) முதற்பாட்டே உதாரணமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/18&oldid=493863" இலிருந்து மீள்விக்கப்பட்டது