பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



நினைக்கிறதுபோல் சாதாரண ஆற்றல் இல்லை. இறைவன் என்றைக்கு நம்மைப் படைத்தானோ அன்றைக்கே தனக்குரிய முழு ஆற்றலையும் நமக்குத் தந்திருக்கிறான். நாம் பயன்படுத்துவதில்லை. அவ்வளவுதான். பலகோடி நியூரான்கள் இருக்கின்றன நம் மண்டையில். நாம் உபயோகப்படுத்துவது ஒரு பர்சன்ட்தான். ஐன்ஸ்டின் கூட 12 பர்சென்ட்தான் உபயோகப் படுத்தினார் என்கிறார்கள். அதிகமாக உபயோகப்படுத்த ஆரம்பித்தால், கந்துக மதக்கரியை அடக்குவது, தண்ணிரில் நடப்பது என்றெல்லாம் செய்யலாம். ஒன்றும் அதிசயம் இல்லை. இயற்கை இறந்தது என்று பட்டம் கொடுக்கிறதே சரியில்லை.

இயற்கைதான் உதவுகிறது. இயற்கையின் உதவி கொண்டுதான் இதையெல்லாம் செய்கிறார்கள். உங்களுடைய ஆற்றலை வளர்த்துக் கொள்வீர்களானால் நீங்களும் செய்யலாம். இதைக் கவிச் சக்கரவர்த்திதான் முதன் முதலிலே கண்டுபிடித்தான்.

அந்த அப்பாவி சுக்கிரீவன் கூற்றாக,

வேறுள குழுவையெல்லாம் மானுடம் வென்றதம்மா

என்று சொல்வதன் மூலம் இயற்கை இறந்தது என்று ஒன்றும் கிடையாது என்று கம்பன் தெரிவிக்கிறான். யோகப் பயிற்சி உடையவர்களே இன்றைக்குச் செய்கிற காரியத்தை அனுமன் செய்கிறது என்ன பெரிய காரியம்! ஆகவே பெரிதாக வளர்வதும், சிறியதாகக் குறுகுவதும் சாதாரண- அணிமா, லகிமா, மகிமா என்று சொல் வார்கள்- அஷ்டமா சித்திகள். அது சாதாரண சமா சாரங்கள். அதை விளம்பரப்படுத்துவதற்காகச் செய்ய வில்லை. தேவை ஏற்படும்போது இன்றைக்குக்கூட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/26&oldid=480960" இலிருந்து மீள்விக்கப்பட்டது