பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்19



இதைப் பெரியவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள். என்னுடைய சிறு அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

இன்னொரு நாட்டிலே வாழ்ந்த ஒரு யோகி ஒரே நேரத்தில் ஒர் இடத்தில் இருந்த ஒரு கலெக்டர் அவர் மனைவி ஆகியோரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது 450 மைலுக்கு அப்பால் கதிர்காமத்திலிருந்தும் பேசிக் கொண்டிருந்தார். இதைக் கண்ணாலே பார்த்திருக்கிறேன். அதனாலே இயற்கை இறந்தது என்று ஒன்றும் கிடையாது. அனுமன் செய்தது சாதாரணச் செயல். இராமன் என்ற பெருமானுடைய தொண்டனாகிவிட்டவனுக்கு இது என்ன பிரமாதமான செயல் -கடலைத் தாண்டுவது!

15. கங்கைவேடன் காளத்திவேடனின் மறுபதிப்பா? காளத்தி வேடன் கங்கை வேடனின் மறுபதிப்பா?

இது என்ன பதிப்பு? இப்போ முன்னாலே வந்தவன் கம்பன். நான் என்னுடைய சிற்றறிவின்படி கூறுவேன். தொண்டுக்கு ஒரு வடிவம் கொடுத்துப் பெரிய புராணம் இயற்றினாரே, அவரே கம்பனைப் பார்த்துத்தான் இயற்றினார்.

தொண்டு என்கிற ஒரு பண்புக்கு அனுமன் மூலமாக வடிவு கொடுத்தான் கம்பன். சேக்கிழார் அதைப் பார்க்கிறார். மூன்று நூற்றாண்டுகள் தாண்டிவிட்டன. இராமாயணத்திலே உள்ள அத்தனை பாத்திரங்களிலும் ஒரு பாத்திரம் அனுமன். இதை நினைக்கிறார். இது இன்றைக்கு நாட்டுக்குத் தேவை. எனவே, இராமாயணத்தி லிருந்து அனுமனைப் பிரித்து எடுக்கிறார். அனுமன் என்று சொன்னாலும் தொண்டு என்று சொன்னாலும் ஒருபொருட் பன்மொழி. இதற்கு ஒரு வடிவு கொடுக் கிறார். 63 வரலாறுகளாகப் பாடுகிறார். ஆகவே, One is

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/27&oldid=480961" இலிருந்து மீள்விக்கப்பட்டது