பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



கூறுவதற்கு யுத்த காண்டத்தை நாலாயிரம் பாடல்களாக (4310) அவ்வளவு விரித்துப் பாட வேண்டிய அவசியம் என்ன?

அந்தப் போரைப்பற்றிப் பாடவேண்டும் என்பதுதான் அவன் கருத்தா?

முன்பு ஒரு கேள்விக்கு விடை கூறும்போது'பல்லவப் பேரரசு வீழ்ச்சி அடைந்துவிட்டது. சோழப் பேரரசு தொடக்கத்தில் இருக்கிறது என்று கூறினேன். அதை மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வர விரும்புகிறேன். பல்லவர்கள் தமிழர்கள் அல்லர் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்று. தமிழர்களுடைய ஆட்சி என்பது சோழர்களுடைய ஆட்சிதான். அது வருவதற்கு ஒரு நிலைக்களம் அமைக்க வேண்டும். சோழர்கள் ஆட்சி வருவதானால் வீழ்ச்சி அடைந்த பல்லவர்கள், கிழக்குச் சாளுக்கியர்கள், மேற்குச் சாளுக்கியர்கள், புலிகேசி போன்ற எத்தனையோ பகை சுற்றியிருக்கிறது. இத்தனை பகைகளையும் வென்றுதான் சோழப் பேரரசு நிலைகொள்ளவேண்டும். அப்படி நிலைகொள்வதானால் போரிட்டுத்தான் நிலைகொள்ள முடியும். அப்படிப் போரிடும்போது எப்படிப் போரிட வேண்டும் என்பது மிக இன்றியமையாத ஒன்று.‘Ends justify the means’ என்று சொல்கிறோமே, அதுபோல எதையாவது செய்து காரியத்தைச் சாதித்துவிட வேண்டுமென்ற கொள்கையைத் தமிழர்கள் ஏற்றுக்கொண்டதே இல்லை.

வழியும் தூய்மையாக இருக்க வேண்டுமென்று மகாத்மா சொன்னாரே, அது தமிழர்களுடைய பழைய கொள்கை. அந்த முறையிலே போரிட வேண்டும். அதாவது, அறத்தின் அடிப்படையில் நின்று போரிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/32&oldid=480972" இலிருந்து மீள்விக்கப்பட்டது