பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



காரணம் அன்றைய சூழ்நிலை. இந்தச் சமுதாயத்திற்குச் செல்லவேண்டிய வழியைப் புலன்படுத்த அதைக் கருவியாகப் பயன்படுத்துகின்றான்.

21. தாயினும் உயிர்க்கு நல்கும் சபரி என்று கம்பனால் பாராட்டப் பெற்ற சவரி, இராமாயண வரலாற்றிலே இராம பிரானின் வைபவத்தைக் குறித்துக் கூறுவதற்கு அவ்வளவு பெரிதாக உதவி செய்ததாகக் காணப்பட வில்லை. கம்பராமாயணப் பாடல்களிலே 9 பாடல்களிலே இருக்கின்ற படலம். அப்படிப்பட்ட சபரியின் வரலாற்றைக் கூறத்தான் வேண்டுமா? அதற்கு ஏதாவது அவசியம் உண்டா என்பதை விளக்க வேண்டும்?

சபரியின் வரலாறு ஒன்பது பாடல்களிலே இருக்கலாம். பெரிய தேருக்கு ஒரு சிறிய துண்டுதான் அச்சாணி. அதுபோல இராகவன் அரையும் குறையுமாக இன்னார்தான் பிராட்டியைக் கவர்ந்து சென்றிருக்க வேண்டுமென ஒரு ஹேஷ்யம் என்று சொல்லுகிறோமே, அந்த முறையில் தேடிக்கொண்டு வருகிறான். இப்போது அவன் வருகின்ற வழியில் நேராகப் போனால் வாலி கிட்டேதான் போய்ச் சேரமுடியும். வாலியினிடம் முன்னைப்பின்னே தெரியாதவனாகிய இவன் போய்த் தன் குறையைச் சொல்லியிருப்பானானால் நிச்சயம் வாலி உதவியிருப்பான். இராமகாதை நடைபெற்றிருக்கும். ஆனால், தன்னுடைய மனைவியைக் கவர்ந்து சென்றான் ஒருவன், அவனுடன் போர்புரிவதற்கு, தம்பியினுடைய மனைவியைக் கவர்ந்து சென்ற ஒருவன் துணையைப் பெறும் பரிதாபகரமான நிலைக்கு இராமன் தள்ளப் படுவான். இதை உணர்ந்தவனாகிய கம்பன் மாபெரும் ஞானியாகிய சபரி வாயிலாக, இந்த மாபெரும் குற்றம் நிகழ்ந்து, இராகவனுக்குப் பழி வாராமலிருக்க ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/34&oldid=480975" இலிருந்து மீள்விக்கப்பட்டது