பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்29



சிலர் துன்பம் அடையத்தான் நேரிடுகிறது. இன்றைக்கும் கூட அது நடக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் நடக்கிறது. ஆகவே ஒரு தலைவன் ஒன்றைச் செய்ய வேண்டுமென்றால் அந்தத் தலைவி விட்டுக்கொடுக்க வேண்டும். இதுபோல பரதனுடைய பாத்திரமும், இலக்குவனுடைய பாத்திரமும். இந்தக் காப்பியத்திலே இரண்டு பாத்திரங்கள் படைக்கப் பெற்றிருக்கின்றன. அவை இராமனுக்குத் தொண்டு செய்வதிலே, ஒருவன் பக்கத்தில் இருந்து செய்கிறான், இன்னொருத்தன் தூரத்தில் இருந்து செய்கிறான்.

இந்த அறத்தை வைத்துக் காட்ட வருகிறான் கவிச் சக்கரவர்த்தி. அவர்களுடைய தொண்டுதான் முக்கியமே தவிர, அவர்களோடு தொடர்ந்தவர்கள் அந்தத் தொண்டிலே முடிந்தால் பங்கு கொள்ளலாம், இல்லை யானால் சும்மா இருக்க வேண்டியதுதான். இது அவர்களுக்குச் செய்யப்பட்ட அநீதி என்று சொல்வது ஒரு குறுகிய நோக்கம்.

பரதன் கல்யாணம் பண்ணிக்கொண்டு நம்மைப் போல் வாழ்ந்தான் என்றால், அது ஒருவேளை உயர்வு என்று நினைக்கலாம். ஆனால், பரதனாக இருக்க மாட்டான். அ.ச.வாக இருந்திருப்பான். இந்த வேறு பாட்டை மனத்திலே கொள்ள வேண்டும். ஒரு மாபெரும் காரியம் நிகழ வேண்டுமேயானால் சில பேர் தியாகம் செய்துதான் தீரவேண்டும். இராமனுக்குத் தம்பியாகப் பிறந்த காரணத்தினாலே இலக்குவனுக்குக் கொடுக்கப் பட்ட பாத்திரமும் இதேபோல்தான்.

இனி, இராவணனைப் போன்ற ஒருவனை ஒருத்தி திருமணம் செய்து கொண்டால் - உரலுக்குள் தலையை விட்டால் அது இடிக்கும்- அந்த நிலையிலும் அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/37&oldid=480979" இலிருந்து மீள்விக்கப்பட்டது