பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



கணவனிடத்தில் அன்பு காட்டுகிறாள் என்றால், அது அவளுடைய சிறப்பைக் காட்டுகிறதே தவிர, வேறு ஒன்றுமில்லை. இதை male chauvinism என்று சொல்லிப் புண்ணியம் இல்லை. அந்தந்தப் பாத்திரங்கள், அவை சாதாரண பாத்திரங்கள் அல்ல; அதை மறந்து விடாதீர்கள்; ஈடு இணையற்ற பாத்திரங்கள் உலகத்தில் மாபெரும் செயலைச் செய்வதற்காகப் படைக்கப்பட்ட பாத்திரங்கள். இன்சிடெண்ட்டலாகச் சில பாத்திரங்கள் அடிபடத்தான் செய்யும் ஆகவே, அதில் தவறு ஒன்றுமில்லை.

23. காப்பியம் என்பது அரிய கலை. ஆனால் கம்பனுடைய இராமாயணத்தின் விருத்தப் பா அத்தனையையும் வெண்பாவாக மாற்றி இராமாயண வெண்பா என்று காப்பியம் செய்திருக்கிற கவிஞரின் நோக்கம் என்ன?

கம்பராமாயணத்தில் அவர்களுக்கு இருக்கிற ஈடு பாட்டை வெளிப்படுத்துகிறார்களா? அல்லது விருத்தத்தை வெண்பாவாக ஆக்க முடியும் என்பதாகத் தங்கள் திறனை வெளிப்படுத்தினார்களா?

இது போன்ற சிறப்பு கம்பராமாயணம்தவிர வேறு ஒரு நூலுக்கு உண்டா? -

இந்த வினாவுக்கு நீங்களே விடை கூறிவிட்டீர்கள். அதாவது எங்களாலே பாட முடியும் என்பதைக் காட்டுவதுதான் அடிப்படை. அது ஒருபுறம் இருக்க. இது ஒரு புதிய முயற்சி. அவ்வளவுதான். தவறு ஒன்றுமில்லை. விருத்தப்பாவை இப்படிப் பண்ணலாமென்று, புகழேந்திதான் இதற்கு வழி வகுத்தான். அவன் வம்பு கொடுக்காதிருந்தால் வெண்பாவுக்கு இவ்வளவு மரியாதை வந்திருக்காது. அவன் போய் நளவெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/38&oldid=480981" இலிருந்து மீள்விக்கப்பட்டது