பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



மனிதர்கள் மட்டுமல்ல-புல் பூண்டு எல்லாவற்றையும் சேர்த்துக்கொள்கிறது. சரண் நாங்களே என்ற கருத்து இது. இன்று நேற்று தோன்றியது இல்லை, என்றோ தோன்றிய கருத்து. அதைக் கவிச்சக்கரவர்த்தி அழகு படுத்துகிறார். ஒருவர்தான் தலைவர் - இரண்டாவது தலைவர் இருக்க முடியாது. இந்தக் காலத்திலேயே இதற்கு எளிதாகப் பொருள் கொள்ளலாமே- ஏன் சிரமப்படுகிறீர்கள்?

முடிவுரை.

நண்பர்கள் பலர் நன்கு கற்றவர்கள். மேலும் சிந்திப் பதற்காக இந்த வினாக்களை எழுப்பினார்கள். அவற்றுக்கு ஏதோ நான் விடை கூறிவிட்டேன் என்பது பொருள் அல்ல. அவர்களுக்கே இந்த விடை நன்றாகத் தெரியும். என்றாலும், பகிர்ந்துகொள்வதற்காக இந்த வினாக்களைத் தொடுத்திருக்கிறார்கள். அப்படி வினாக்களைத் தொடுப்பதன் மூலம் நாம் புதிய சிந்தனையில் போவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. வினாவிடையிலேயே உள்ள சிறப்பு இதுதான்.

இதுவரையிலே நாம் அந்த முறையில் சிந்தித்திருக்க . மாட்டோம். அப்படிச் சிந்திப்பதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்பதுதான் இத்தகைய ஒரு நிகழ்ச்சியினுடைய அடிப்படையாகும்.

இப்போது. இராமகாதையைப் பொறுத்த மட்டிலே ஒரு அறுபது, அறுபத்திரண்டு இராமாயணங்கள் இருக்கின்றன. அண்மையிலே ஜப்பானிலிருந்து வந்த ஒருவர் கிழக்கு ஆசியாவிலுள்ள சயாம் முதலான இடங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/40&oldid=480983" இலிருந்து மீள்விக்கப்பட்டது