பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



வலியப் பெற்றுக்கொண்டான். அந்நாட்டு ஜனங்கள் போன ஆட்சியோடு, இந்த ஆட்சியை compare செய் வார்கள்.

வாலி ஆட்சி எப்படிப்பட்டது என்பதற்கு இராமன் நிறையரசு' என்று 'சர்டிபிகேட் தருகிறான்.

அதை வலியப் பற்றிக்கொண்டான் அவன் தம்பி சுக்கிரீவன். மக்கள் அந்த ஆட்சியோடு இந்த ஆட்சியை ஒப்பு நோக்குவார்கள். நலனும் தீங்கும் வாலி காலத்தில் இப்படி நடக்குமா என்று நினைப்பார்கள்.

நிரம்பினான் ஒருவன் காத்த நிறை அரசு இறுதி நின்ற

வரம்பு இலாததனை மற்று ஓர் தலைமகன் வலிதின் கொண்டால்

அரும்புவ நலனும் தீங்கும் ஆகலின் ஐய நின்போல்

பெரும் பொறை அறிவினோரால் நிலையினைப் பெறுவது அம்மா

'அதற்கேற்றபடி நீதான் நடத்த வேண்டுமென்று யாரிடத்திலே இந்த அறிவுரையைச் சொல்கிறான் இராமன்? அனுமனிடம் சொல்கிறான். இங்கேதான் கவிச் சக்கரவர்த்தி ஈடு இணையற்று விளங்குகிறான். இதை இராமன் சுக்கிரீவனிடத்தில் சொல்லியிருக்க வேண்டும். சொன்னால் பிரயோஜனம் இல்லை அவன். மாபெரும் அறிஞனாகிய அனுமனிடத்திலே - "நீதான் அமைச்சனாக இருந்து guide பண்ண வேண்டும். ஜாக்கிரதை, நிறை அரசு போய்விட்டது. இப்படி வலிதில் பற்றிய உங்களுடைய சுக்கிரீவன் ஆட்சி வந்திருக்கிறது. மக்கள் ஒப்பிடுவார்கள். ஆகவே, நீ இந்த அரசை ஜாக்ரதையாகக் கொண்டுசெலுத்து" என்று சொல்கிறார் என்றால், இது அனுமனுக்குச் சொல்லியதா?

இந்த உலகத்திலே எத்தனை சாம்ராஜ்யங்கள் தோன்றுகின்றனவோ அத்தனை சாம்ராஜ்யங்களுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/44&oldid=480987" இலிருந்து மீள்விக்கப்பட்டது