பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



கொடுக்கப்பட்ட காரணத்தினால், அது சம்பந்தமான ஆங்கில நூல்களைப் படிக்க ஆரம்பித்தேன். மிகத் தீவிரமாக முயற்சி பண்ணினேன். இது பண்ணுகிற காலத்திலே தமிழில எப்படி அதைப் பொருத்துவது என்பது பெரிய சிக்கல். முதல் வருடம் ஏறத்தாழ ஆங்கிலத்திலே இருந்ததை அப்படியே தமிழில் சொல்லிக் கொண்டிருந்தேன். அது எனக்கே பிடிக்கவில்லை. நாளாக, நாளாக அவங்க சொல்ற திறனாய்வு முறைகளையும் அந்தத் தலைப்புகளையும் அதிலே சொல்லப்பட்ட பொருட்களையும் அப்படியே தமிழ் இலக்கியத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆங்கிலத்தில் Universal என்றுதான் சொன்னார்கள். இருந்தாலும் அது சரியில்லை என்ற ஒரு எண்ணம் தோன்றிற்று. ஆனால், அதைப்பற்றி 'டிஸ்கஸ் பண்ணுவதற்கு ஆளே கிடையாது. அப்போது அதைப் படித்துக் கொண்டே இருந்தவன் நான் ஒருத்தன் தான். அப்போது கி.வா. ஜகந்நாதன் என்னுடைய பழைய நண்பர். இது மாதிரி புதுசா ஒன்று பண்ணுகிறீர்களே, இதை எழுத ஆரம்பீங்க அப்படின்னு சொன்னார்.

கலைமகளில்தான் இலக்கியக் கலை பற்றி எழுத ஆரம்பிச்சேன் 1943-1944ல். 1947-1948ல் அதற்கு ஒரு முழு வடிவம் கொடுத்து நூலாகக் கொண்டு வர முடிந்தது. ஆகவே, திறனாய்வுக்குப் போகவேண்டும்னு போக வில்லை. திறனாய்வு என்னைத் தேடி வந்தது. அப்போது ‘லிட்டரெரி கிரிட்டிசிஸம் என்பதை இலக்கிய விமர்சனம் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அது எனக்கு என்னவோபோல இருந்தது. அப்ப முதன் முதல்ல திறனாய்வு என்ற சொல்லைப் புதுசா உண்டாக்கி கலை மகளில் எழுதினேன். அப்போது பலத்த எதிர்ப்புக்கள். ஆனந்தவிகடனில் ஒரு குட்டித் தலையங்கமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/48&oldid=481136" இலிருந்து மீள்விக்கப்பட்டது