பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



யிலே உண்டு. இல்லையென்று சொல்லுவதற்கு இல்லை. இப்ப இந்த விளக்க உரை என்று வருவதை எதில் கொண்டுபோய் அடக்குவது என்ற ஒரு பிரச்சினை எழுந்தது எனக்கு. அப்போது திறனாய்வு முறையிலே அப்பிரிசியேட்டிவ் கிரிடிசிஸம்’ (appreciative criticism)—gy ஒன்னு உண்டு. இதெல்லாம் தொடக்கக் காலம். 45கள் வாக்குல அப்பிரிசியேடிவ் கிரிடிசிஸம்-னு இருக்கிற பகுதிகளிலே சிறந்த பகுதிகளை எடுத்து வைத்துக் கொண்டு, அதைப் புகழ்ந்து அல்ல அது எப்படிச் சிறப்பு பெற்றிருக்கிறது என்று எழுதுவது. அதுதான் அவர்கள் மேல்நாட்டில் சொன்னது. அந்த அப்பிரிசியேடிவ் கிரிடிசிஸம்-ங்கிறது ஒருவகையில் நமக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. ஏனென்றால், இந்த விளக்க உரை எழுதினவர்கள் யாருமே குறைபாட்டைக் கண்டதே கிடையாது. குறைபாடு இருக்கிறது. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், சொல்றதே கிடையாது. அதை மரபாகவே வைத்து விட்டார்கள். அது ஏறத்தாழ நச்சினார்க்கினியர் காலம். பேராசிரியர் காலம் அது எல்லாமே அப்படியே இருந்திருக்கிறது. இனி 12ஆம் நூற்றாண்டுக்கு அப்புறம் இந்த நிலைமை மாறிவிட்டது. ஒரு அளவிற்குத் திருக்குறள்தான் இதற்கு முதன் முதலில் ஒர் உதாரணம். மணக்குடவர் முதலானவர்கள் எழுதின உரையைப் பரிமேலழகர் முதலானவர்கள் மறுக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. அப்படி மறுக்கின்ற காலத்திலே மிகவும் கெளரவமான முறையிலே மறுத்தார்கள். மறுத்து, புதிய விளக்கம் சொன்னார்கள். அதே மாதிரி இப்போது பேராசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், இவங்களோட உரையை யெல்லாம் யாரும் இது மாதிரி செய்யவில்லை. ஆனால், இளம்பூரணர் உரையை, நச்சினார்க்கினியர் மறுத்திருக்கிறார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/50&oldid=481219" இலிருந்து மீள்விக்கப்பட்டது