பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்



40. ஒஹோ!...

மாடலமறையோன் சொன்னது, ஆகையினாலே, அவனுடைய வீழ்ச்சியிலே tragedy இருந்தது.

41. இப்போ... சிலப்பதிகாரத்திலே அந்த அரசன் வீழ்றா னில்லையா? ஆமாம்.

42. அரசனுடைய வீழ்ச்சியை நீங்க அவலம்னு கருதுறிங்களா, அல்லது என்ன...?

அரசனுடைய வீழ்ச்சியை அப்படிப் பெரிசு படுத்தத் தேவையில்லை. ஏன் என்றால்...

43. அநீதியின் வீழ்ச்சினு சொல்றீங்களா?

இல்லை, இல்லை, அரசனைப் பற்றி இவர் ஒன்னும் சொல்லலையே, அவனுடைய பண்புகள், நற்பண்புகள் ஏதாவது ஒன்றைப் பற்றி சொல்லியிருந்தார் என்றால் வீழ்ச்சி என்று நினைக்கலாம். ஒரு இடைத்தரகர் மாதிரி வருகிறான். அவன் செத்ததுனால, என்ன, எவனோ ஒருத்தன் செத்தது மாதிரி அவனும் செத்தான். அதனால அது பற்றி ஒன்றுமில்லை.

44. கடைசியிலே, கண்ணகி தனியாக ஆகிவிடுகிறாளே, மதுரையை எரித்துவிட்டு.

ஆமாம்.

45. கண்ணகியுடைய தனி நிலையை நீங்க சாலிலக்கி"னு சொல்லுவீங்களா?

இல்லை, இல்லை. அது பைத்தியக்காரத்தனம். கம்யூனிகேஷன்’ intended communicationதான் சாலிலக்கி’ இங்கே அதுவே கிடையாது. தன்னுடைய உணர்ச்சியிலே, மனம் போனதைப் பேசிக்கிட்டுப் போகிறாள் அவள். அந்த உணர்ச்சியை அடக்குகிறாள், புது நம்பிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/60&oldid=481558" இலிருந்து மீள்விக்கப்பட்டது