பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்

46 இப்போது உதாரணத்திற்கு, இந்தக் காப்பியம், சிலப்பதிகாரம், கம்பராமாயணம், இந்த மாதிரி இடங்களிலே, அதாவது ஒரு குறிப்பிட்ட பாத்திரம் சொல்ல முடியாததாகச் சிலவற்றைச் சொல்லிவிட்டு, அதாவது incommunicable. அதாவது மொழியில் சொல்ல முடியாததைச் சொல்ல முயற்சி பண்ணியிருக்கிறானு சொல்லலாமா?

Communicable என்பதற்கு இந்தப் பொருள் இல்லையே.

47. அடுத்தது- புதிதாக இப்ப நீங்க செய்துகிட்டுவந்த இலக்கிய விமர்சனம், இலக்கியக் கோட்பாடுகளை 'அப்ளை பண்ணி நிறையத் தமிழ் இலக்கியத்திலே நிறையப் புதிய விசயத்தை நீங்க சொன்னிங்க. இப்பப் புதியதாக ரீடர்ஸ் ரெஸ்பான்ஸ் தியரி-னு ஒன்று வந்திருக்குங்க. உங்களுக்கும் தெரியுங்க.

ஆமாம்.

48 அதாவது, ஒரு குறிப்பிட்ட படைப்பை ஒருவன் எழுதும் பொழுது அவன் மொழி வழியாகத் தன்னுடைய படைப்பை ஆற்றுகிறான். அந்தப் படைப்பை எழுதி முடித்தவுடன் அவன் அந்தப் படைப்பிலிருந்து விலகிக் கொள்கிறான், ஆசிரியன் என்பவன். அதன் பிறகு அந்தப் படைப்பை வாசகன் படிக்கும்பொழுது அந்த வாசகர்கள் வந்து அந்த மொழிவழியான அந்தப் படைப்பைப் படைத்தாருனு ஒரு புதிய அர்த்தத்தைச் சொல்றான். அதாவது ஆசிரியர் நினைக்காத அர்த்தம்...

அதைப் பண்ணியிருக்கிறோம். எது வழியாக வருகிறது என்று தெரியாது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அ.ச.ஞா.பதில்கள்.pdf/62&oldid=481714" இலிருந்து மீள்விக்கப்பட்டது